பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு M. அனந்தசயனம் அய்யங்கார் 481 வாழ்த்து கூறியுள்ளார். முன்னுரை நான்கு பக்கங்களில் அமைந்துள்ளது. இதுவே ஒரு சிறந்த கட்டுரை போல் நூலை அலங்கரித்து நிற்கின்றது. வைகுந்த வாசியான இப்பெருமகனாரின் ஆசியும் தொடர்ந்து இருந்து வருகின்றது. வடகலை திருமண்காப்புத் திகழும் அழகிய சாந்த மான திருமுக மண்டலம், கதர் குல்லாய் தரித்த திருவபிஷேகம் இடுப்புக் கீழ் நீண்டுள்ள காவி நிற மேலங்கி யும் பஞ்சகச்சமும் அலங்கரிக்கும் திருமேனியுடைய பெருமான் என்றும் மனத்தில் உள்ளார். இவரைச் சேவிக்கும் பொழுதெல்லாம் 'கெடும்இடர் ஆய எல்லாம் கேசவா! என்ன ; ” மாய்ந்து அறும் வினைகள்தாமே மாயவா என்ன: என்ற திருவனந்தபுரத்து எம்பெருமான்மீது மங்களா சாசனம் செய்த நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரத் தொடர்கள் என் மனத்தில் எழும். சயனத்திருக் கோலத்தில் சேவை சாதிக்கும் அனந்தசயனத்து அண்ண லார் இருந்த கோலத்தில், நின்ற கோலத்தில் நடந்த கோலத்தில் சேவை சாதிப்பது போன்ற ஒரு பிரேமை என்னிடம் ஏற்படும். அவ்வளவு அன்பும்பாசமும் என்னிடம் வைத்திருந்தார் அப்பெருமகனார். 1976 பிப்ரவரியில் என் மூத்த மகன் இராமலிங்கத்தின் திருமணம் வேலூரிலும் 1977-ஜூனில் என் இளைய மகன் டாக்டர் இராமகிருஷ்ணனின் திருமணம் திருச்சியிலும் நடைபெற்றன. இத்திருமணங்கள் நடைபெற்ற இரண்டு நாள் கழித்து, திருப்பதியில் பல்கலைக் கழக வளாகத்தி லுள்ள என் குடிசையில் ஒரு சிறு வரவேற்பு விருந்து 2. திருவாய் 10.2:1, 10 ம நி-31