பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமி பிள்ளை பண்டையஉரையாசிரியர்களாகிய நச்சினார்க்கினியர் பேராசிரியர், பரிமேலழகர், அடியார்க்கு நல்லார் சேனா வரையர், சங்கர நமச்சிவாயர்,சிவஞான முனிவர் போன்ற உரை மன்னர்களுடன் வைத்தெண்ணக் கூடியவர் உரை வேந்தர் ஒளவைதுரைசாமிபிள்ளை. காலவேறுபாட்டாலும் இடவேறுபாட்டாலும் இப்பெருமகனாரிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்புகள் பெறாவிடினும் இவர் எழுதிய உரை களுடன் நெருங்கிப் பழகிய பேறு பெற்றேன். நான் தமிழன்னையின் மடியில் தவழ்ந்து கொண்டிருந்த காலத்தில் இவரது சிந்தாமணிச் சுருக்கம்’, ‘சிந்தாமணி ஆராய்ச்சி', 'மணிமேகல்ைச் சுருக்கம்’, ‘மணிமேகலை ஆராய்ச்சி', 'சிலப்பதிகாரச் சுருக்கம் சிலப்பதிகார ஆராய்ச்சி (இவை யாவும் உரையிடையிட்ட பாட்டுடை நூல்களின் பாணியில் அமைந்தவை) என்ற நூல்களில் 'சிறுதேர் உருட்டி மகிழ்ந்ததுண்டு. இவை யாவும் நான் இலக்கிய உலகில் வேகமாகப் புகுந்து நடையாடுவதற்குக் கருவி நூல்களாக அமைந்து உதவின.இந்த அநுபவங்களை நான் துறையூர் வாழ்வில் (1941-1950) பெற்றேன். (1949-51) நான் தமிழ் எம்.ஏ. தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தபொழுது புறநானூற்றில் முதல் ஐம்பது பாடல்கள் தேர்வுக்குப் பாடமாக அமைந்திருந்தன. 1948-1945க்கு வித்துவான் தேர்வுக்குப் படித்தபொழுது