பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய சுவாமிகள் 489 இந்த இரண்டு நூல்களையும் எழுதிப் பெறவில்லை. அக்காலத்தில் தமிழ் பயிற்றும் முறை அறிவியல் பயிற்றும் முறை’, அணுக்கரு பெளதிகம்" (மொழி பெயர்ப்பு) "அணுவின் ஆக்கம்', 'மானிட உடல் (மொழி பெயர்ப்பு) நூல்களை எழுதி வெளியிடுவதில் ஊக்கம் மிகுந்திருந்தமை யால் திரு. பி.ப. அண்ணங்கராசாரியர் சுவாமிகளிடம் தொடர்பு கொள்ளும் பேறு பெறவில்லை. மனமும் அவர் பக்கம் பாயவில்லை. இப்போது அதனை நினைக்கும் போது எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் யொண்ணாது புண் ணியம் வந்து எய்து போதுஅல்லால்' என்ற ஒளவைப் பாட்டியின் வாக்குதான் நினைவிற்கு வருகின்றது. அப்பொழுது ஏழுமலையானின் திருவருளும் கூடி வரவில்லை. 1960-முதல் திருப்பதியில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது என் டாக்டர்(பிஎச்.டி) பட்டத்திற் காகப் பதிவு செய்து கொள்ள முயன்று கொண்டிருந்தேன். காரைக்குடியிலிருந்தபோதே மேற்கொண்ட முயற்சி பதினைந்து ஆண்டுகட்குப் பின்னர் திருப்பதி மலைமேல் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கும் வேங்கடம் மேய விளக்கின் அருளால் பதிவு செய்ய அநுமதி கிடைத்தது (1964). 'நாலாயிரத்தில் நம்மாழ்வாரின் தத்துவம்’ grass p 35060.jøL (Religion and philosophy of Nalayira Divya Prabandham with Special Reference to Naminalwar) ஆய்வுப் பொருளாகக் கொண்டு ஆய்ந்தேன். கட்டுரையையும் ஆங்கிலத்தில்தான் அமைத்தேன், (அதன் அச்சுவடிவம் 920 பக்கங்களாகப் பின்னர் அமைந்தது.) அப்பொழுது திரு. பு. ரா. புருடோத்தம நாயுடுவின் 'ஈட்டின் தமிழாக்கம் (பத்துத் தொகுதிகள்) துணையாக இருந்த போதிலும் நாலாயிரம் முழுவதற்கும்-தத்துவ 1. நல்வழி-4