பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய சுவாமிகள் 1950-so வரை காரைக்குடி வள்ளல் அழகப்பர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றிய காலம். இக்காலப் பகுதியில் நான் பி.டி. வகுப்பு மாணவர்களுடன் காரைக்குடிக்குச் சுற்று வட்டத்தில் சுமார் 15-20 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள உயர்நிலைப் பள்ளிகளில் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களின் வகுப்புக்களை நேரில் பார்த்து அவர்கள் நடைமுறையில் கற்பிக்கும் முறைகளைத் தெரிந்து கொள்வதற்காகச் செல்வதுண்டு. அப்பொழுது பள்ளத்தூர் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த திரு. முத்து வேங்கடாசலம் அய்யர் அவர்களின் நட்பு ஏற்பட்டது. அதே காலத்தில் நான் திருப்பாவை திருவெம் பாவை பற்றிய ஒப்பு நோக்கு ஆய்வில் ஈடுபட்டிருந்தேன். திருப்பாவை (வை.மு.கோ.) உரையையும் திருவெம் பாவை (திரு ப. இராமநாதப் பிள்ளை) உரையையும் படித்து வந்த காலம். 'திருப்பாவையும் திருவெம்பாவை யும் என்ற தலைப்பில் 'கலைமகள்' இதழில் ஒரு கட்டுரை யும் குமரிமலரில் மார்கழி நோன்பு பற்றிய கட்டுரையும் எழுதி வெளியிட்டிருந்தேன். அப்பொழுது திரு. முத்து வேங்கடாசலம் அய்யர் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய சுவாமிகளின் திருப்பாவையின் 'திவ்வியார்த்த தீபிகை யும்; அவர் அதற்கு எழுதிய ஆழ் பொருள் விளக்கை'யும் குறிப்பிட்டார்கள். அவை கிடைக் கும் இடத்தையும் முகவரியுடன் தந்தார்கள். ஆனால்