பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய சுவாமிகள் 491 மன்னியவாச் சாரியரின் மலர்த்தாள் போற்றி வைணவத்தின் வளமனைத்தும் உணரப் பெற்றோன் பன் னியதை ஏட்டினிலே பரவச் செய்தான் பலவுரைத் தென்? அவன்திறனைப் பகரல் ஆற்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். அவர் வாழ்க. இப்படியாக இவருடைய திவ்வியார்த்த தீபிகையைப் பயன்படுத்திக் கொண்டேன். ஆயினும் இந்த ஆசாரியப் பெருமானை நேரில் கண்டு சேவிக்காமல் என் ஆய்வும் முடிந்தது: டாக்டர் பட்டமும் (1969) பெற்றேன். திவ்வியார்த்த தீபிகையைப் பயன்படுத்தி வந்த போது அதிலுள்ள வடமொழிச் சொற்களுக்கு உரை கூறி விளக்கியவர் என் அரிய நண்பர் திரு. V. S. வேங்கடராக வாசாரியார் . (அப்பொழுது திருப்பதி மத்திய வடமொழி ஆய்வு நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர்). அவர் இன்று இல்லை. இரண்டாண்டுக்கு முன்னர் பரமபதித்துவிட்டார்.வைணவ தத்துவக் குறிப்புகளை என் ஆய்வுக்கு வழிகாட்டியாக இருந்த டாக்டர் W. வரதாச்சாரியார் (திருவேங்கடவன் பல்கலைக் கழக வடமொழித் துறையில் ரீடராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர்) விளக்குவார். முன்பின் நேரில் அறியாதவராக இருந்தாலும் எனக்கு ஐயங்கள் ஏற் பட்ட பொழுதெல்லாம் அவற்றைக் குறிப்பிட்டுபி.ப. அக்கு எழுதுவேன். உடனே விளக்கம் மறு அஞ்சலில் வந்து விடும். கடிதங்கள் எழுதுவதிலும் வந்த கடிதங்கட்கு மறு மொழி தருவதிலும் நானும் என் நண்பர் P. அரங்கசாமி ரெட்டியாரும் (துறையூர் திருச்சி வழக்குரைஞர், 1952-57இல் சென்னை சட்டமன்றப் பேரவை உறுப்பினர்) பெரும் புகழ் பெற்றிருந்தோம். எங்களையும் மிஞ்சி 2. டாக்டர் ந. சுப்புரெட்டியார் மணிவிழா மலர் (செப்டம்பர் 1977)-பக்-25