பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49.3 மலரும் நினைவுகள் விட்டார் இந்த ஆசாரியப் பெருமகனார். வயது முதிர்ந்த காரணமாக உடல் நிலை மிகவும் தளர்வுற்றிருந்தாலும் கையெழுத்து மணிமணியாக இருக்கும். ஒன்றிரண்டு கடிதங்களைத் தவிர பெரும்பாலான கடிதங்களைப் பாதுகாத்து வைக்கவில்லை. இப்போது வருந்து கின்றேன். நான் திருப்பதியிலிருந்த காலத்தில் ஆழ்வார் பாசுரங்களில் ஈடுபட்டிருந்தேன். எனினும் ஆசாரியர் களிடம் காலட்சேபம் பெறாதவனாதலால் சில வைணவ சம்பிரதாயங்களை நான் அறியேன்.மேலும் பாசுரங்களிலும் அவற்றின் உரைகளிலும் நன்கு படித்து அநுபவியாத தொடக்கக் காலம். இக்காலம் முதற் கொண்டே திவ்வியப் பிரபந்தம்பற்றிய கட்டுரைகளைத் தொடர்ந்து திருமலை -திருப்பதி தேவஸ்தானத்தார் வெளியிடும் சப்தகிரியில் வெளியிட்டு வந்தேன். ஒரு சமயம் பெரியாழ்வாரைப் பற்றிய ஒரு கட்டுரையில், ஒரு மகள் தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால் தான் கொண்டு போனான்.? என்ற பாசுரத்தை எடுத்துக் காட்டி ஆழ்வார் தன் வளர்ப்பு மகள் ஆண்டாள் பிரிவு பற்றி இவ்வாறு வருந்து கின்றார் என்று குறிப்பிட்டிருந்தேன். இது தவறு என்பதை அப்போது அறிந்திலேன். திவ்வியப் பிரபந்தத் தில் அதிகம் ஆழங்கால் பட்டு அநுபவியாத காலம். காஞ்சியிலிருந்து விரிவான கடிதம் ஒன்று வந்தது. காஞ்சி பிரதிவாதி பயங்கரம் தான் எழுதியிருந்தார். இது தாய்ப் பாசுரம். ஆழ்வார் தாய் நிலையிலிருந்து பேசுவது. திவ்வியார்த்த தீபிகை இத்திருமொழியின் (3.8) அவதாரிகை காண்க. விளக்கமுறும்' என்று எழுதிய 3. பெரியாழ். திரு. 3, 8;4