பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய சுவாமிகள் 49.3 பின் நீங்கள் பல்கலைக் கழகத்தில் பொறுப்பு வாய்ந்த பதவியிலுள்ளீர்கள். பிரபந்தப் பயிற்சியில்லாத பொதுமக்கள் இதை வேதவாக்காக கொள்வார் களாதலால், இப்படி எழுதுவதைத் தவிர்க்கவும்' என்று அறிவு கொளுத்தியும் இருந்தார். வாசகர்களின் கவனத் திற்காக இவண் குறிப்பிட்ட அவதாரிகையும் ஈண்டுத் தருகின்றேன். தன் மகளுக்கு எம்பெருமான் பக்கலி லுள்ள அன்பு மிகுதியைக் கண்ட திருத்தாயார் இவனுக்கு அவளோடு கலவி உண்டாயிற்றென்று தானறிந்தும் 'லோகோபவாதம் பிறப்பதற்குமுன் இவன் பக்கவில் கொண்டு போய்ச் சேர்த்து விடுங்கள்' என்று பந்துக்கள் சொல்லிய பின்பும் அவளைத் தாயார் எம்பெருமான் பக்கலில் கொணர்ந்து சேர்க்கா தொழிகையாலே, அவன் றானே ஏகாந்தமாக இரவில் வந்து, ஒரு படுக்கையில் தாயுடன் படுத்திருந்த இவளை எழுப்பித் திருவாய்ப் பாடியேறக் கொண்டு போக, பிறகு கண் விழித்த திருத் தாயார் படுக்கையில் பெண்ணைக் காணாமல் பலவகை யாகக் கதறின படியைக் கூறுவது இத்திருமொழி. இதனால் இவ்வாழ்வாருக்குப் பகவத்விஷயத்திலுள்ள அபிநிவேசாதியம் (அதிகப் பற்று) சொல்லியவாறு பெரிய திருமொழியில் கள்வன் கொல் யானறியேன்” (3,7) என்ற திருமொழியை ஒருபுடை ஒத்திருக்கும் இத்திருமொழி. என்பது." இங்ங்ணம் பல இடங்களில் என் தவறுகளைத் திருத்திப் பணி கொண்டவர் பிரதிவாதி பயங்கரம் சுவாமிகள் . பின்னர் ஆழ்வார் பாசுரங்களில் அகப்பொருள் கலப்பு' பற்றிய தத்துவங்களை அறிந்த பிறகு இத்தகைய தவறு கள் நிகழாது கவனமாக இருந்து கொள்வேன். நான் எழுதும் நூல்களிலும் இத்தவற்றினைத் திருத்திக் கொண் டேன்." என்னுடைய ஐயங்களை அகற்றினதாக மேலே 4. விட்டு சித்தன் விரித்த தமிழ்' (பாரி நிலையம், 184, பிரகாசம் சாலை, சென்னை-600 108) பக், 245-245 காண்க.