பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

全岛萤 மலரும் நினைவுகள் குறிப்பிட்டேன். அதற்கு எடுத்துக்காட்டு ஒன்று தருவேன். ஒரு சமயம் திவ்வியார்த்த தீபிகையில் காணப் பெறும் "விளாக்குலை கொண்டு என்ற தொடருக்கு விளக்கம் கேட்டிருந்தேன். அதற்கு சுவாமிகள் எழுதிய விளக்கம்: 9-1-70 நாளிட்டு 48, கோவிந்தப்ப நாய்க்கன் தெரு, சென்னை-600 001 என்ற முகவரியிலிருந்து எழுதிய கடிதம் இது. உயர் திரு. டாக்டர் N. S. ரெட்டியார் அவர்கட்கு அன்பார்ந்த விதேயன் எழுதுவது. தங்கள் கார்டு கிடைத்தது. விளாக்குலை கொண்டு = ஆசாரியர் களின் அருமருந்தன்ன ஸஅக்திகளில் இதுவொன்று, உபமானத்தை உள்ளடக்கிப் பல வார்த்தைகளுண்டு. நாமெல்லாம் விளங்கனி உண்ண விரும்பினால் ஒட்டை உடைத்துத் தள்ளி உள்ளிருப்பதை உண்போம். யானை குலைகுலையாகப் பறித்து வாய்க் கொள்ளும். அதுபோல, ஒரே கவளமாக விழுங்கி - என்றபடி. விதேயன் P. B. Annangaracharya" " . S sv a LSS:6ir Glæsör 3D3S u?á) திருப்பாவை காலட்சேபம் செய்து கொண்டிருந்த காலத்தில் (டிசம்பர் - சனவரி) இக்கடிதம் எழுதப் பெற்றிருக்க வேண்டும் என்று கருதுகின்றேன். என் ஆராய்ச்சியின் போதும் (1964-69) அதன் பின்னரும் என் ஐயங்களைப் போக்குவதற்காக நூற்றுக்கணக்கான கடிதங்களைச் சுவாமிகள் எழுதியதை இப்போது நினைக்கும்போது மயிர் சிவிர்க்கின்றது; உள்ளம் ஆனந்தப் படுகின்றது; அவ்வாச்சாரிய புருஷனை வணங்கவும் செய் கின்றது. நாலாயிரத்திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களைச் சேவித்து அநுபவிக்கும்போது ஆழ்வார் பெருமக்களின் திருப்பாதங்கள் தீண்டிய திவ்விய தேசங்களையெல்லாம். சேவிக்க வேண்டும் என்ற பேரவா என்பால் எழுந்தது. குடும்பத்துடன் சேவிக்க வேண்டும் என்று ஆசைப்