பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்மொழிப்புலவர் வே. வேங்கடராஜுலுரெட்டியார் 37 யனுப்பிப் பணத்தை என்னிட்ம் ஒப்படைத்து விட்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. உறையின் மீதுள்ள எழுத்தினாலும் எழுதினவரை ஊகித்து அறியக் கூட வில்லை. பல்கலைக் கழக முகவரி விட்ட உறை பன் மொழிப் புலவரை நினைக்கச் செய்தது. இவரைத்தவிர பல்கலைக்கழகத்தில் வேறு ஒருவரையும் அறியேனா தலால். ஆனால் எந்தவிதமான முடிவுக்கும் வரமுடியாத குழப்பமான நிலை . பணத்தைப் பள்ளி அலுவலக இரும்பு பீரோவில் வைத்துப் பூட்டி விட்டேன். இரண்டு நாட்கள் கழித்து பன்மொழிப் புலவரிடமிருந்து விவர மான கடிதம் வந்தது. உடனே பணத்தை டிராப்ட்” மூலம் புலவருக்கு அனுப்பிவைத்தேன். கலைமகளைத் தருவதற்குப் பதிலாகத் திருமகளைத் தந்து விட்டார் போலும்! என்று எண்ணிக் கொண்டேன். பிறருக்கு உதவும் உயிராய பண்பு இப்படியெல்லாம் இவரிடம் பரிணமிக்கின்றதே என்று வியந்தேன். இந்நிகழ்ச்சி இன்றும் பசுமையாக என் உள்ளத்தில் உள்ளது. பல சந்திப்புகள் : 1943 முதல் 1963 வரை எண்ணற்ற சந்திப்புகள். இவற்றுள் இரண்டு முறை (1944, 1945) இருபது நாட்கள் வீதம் இவர் இல்லத்தில் தங்கி வித்து வான் தேர்வுக்குப் படித்ததாக நினைவு. வித்துவான் இறுதித் தேர்வுக்குரிய சிவஞான முனிவரின் முதல் சூத்திர விருத்தி என்ற நூலை மின் வண்டியிலேயே கற்பித்தார். சென்னை ஹாமில்டன் வாராவதியிலிருந்து (இப்போது அம்பேத்கார் பாலம்) திருவல்லிக்கேணிக் காவல் நிலையம் வந்து சேர்வதற்கு சுமார் அரைமணி நேரம் ஆகும். அங்கிருந்து பல்கலைக் கழகம் நடந்து செல்வதற்கு மீண்டும் சுமார் அரைமணி நேரம் ஆகும். இந்த நேர்த்தில் கதை சொல்வது போல் சொல்விக்கொண்டே வருவார். பல்கலைக் கழகம் அடைந்ததும் பக்கங்களைக் சுட்டியுரைத்து "நான்கு பக்கங்கள் படியுங்கள் என்று கூறுவார். படித்தால் கண்ணாடியில் நம் முகம் தெரிவது