பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

品统 மலரும் நினைவுகள் ஒர் அரிய நிகழ்ச்சி ; இதனால் தமிழ் வித்துவான் தேர்வுகள் எழுத 1943 இல் உறுதி கொண்டேன். வித்து வான் தேர்வுக்குரிய முன்னைய ஆண்டு வினாத்தாள்களை அனுப்பிவைக்குமாறு சென்னைக்கு வந்தபோது பன் மொழிப் புலவரைக் கேட்டிருந்தேன். ஒப்புக்கொண்டு ஒரு சில திங்களில் அனுப்பிவைத்தார். ஏதோ ஒரு திங் களின் முதல் நாள் மாதச் சம்பளத்தை ஓர் உறையிலும் (ரூ. 350/-க்கு ரூ. 100, ரூ. 10| நோட்டுகள்) எனக்கு அனுப்பவேண்டிய வினாத்தாள்களை ஒர் உறையிலுமாக வைத்துக் கொண்டார். தவறுதலாக என் முகவரி எழுதப் பெற்றிருந்த உறையில் ரூபாய் நோட்டுகளை வைத்து விட்டார். முகவரி எழுதப் பெறாத உறையில் வினாத்தாள்கள் இடம் பெற்றிருந்தன. மவுண்ட் சாலை அஞ்சல் நிலையத்தருகில் மின் வண்டியினின்றும் (Tran cal) இறங்கியவர் ரூபாய் நோட்டுகள் உள்ள உறையை வினாத்தாள் உறையெனக் கருதித் தவறாக அஞ்சல் பெட்டியில் சேர்த்துவிட்டார். அடுத்த உறையைப் பார்க்க நேரிட்டபொழுது அது வினாத்தாள்கள் அடங்கிய உறையாக இருந்தது. உடனே அஞ்சல் நிலையத் தலைவரின் கவனத்திற்குத் தன் தவற்றைக் கொணர்ந் தார். உரிய கட்டணம் செலுத்தி அஞ்சல் பெட்டியைத் திறந்துபார்க்கையில் என் முகவரி எழுதிய உறையில் ரூபாய் நோட்டுகள் இருந்தன. இருந்தாலும் அஞ்சல் விதிப்படி அந்நோட்டுகளைத் தர இயலாது என்றும், இன்சூர் கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு உறையின் மேலுள்ள முகவரியினருக்கே தரப்பெறும் என்றும் அஞ்சல் அலுவலர் சொல்லிவிட்டார். இல்லம் திரும்பிய புலவர் பெருமான் சாவகாசமாக அடியேனுக்கு இது குறித்து ஒரு கடிதம் எழுதினார். கடிதம் கிடைப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே பண உறை துறையூர் அஞ்சலகத்திற்கு வந்து விட்டது. அஞ்சல் நிலையத் தலைவர் அடியேனுக்குச் சொல்லி