பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

臺臺 மலரும் நினைவுகள் பாவங்களுள் சில நிலை பெற்றிருக்கும்; பல சிறிது நேரம் நின்று மறையும். தனக்கு ஒற்றுமையுடையனவும் வேற்றுமையுடையனவுமான பிற பாவங்களால் கேடுறாமல் ரள மாகிச் (சுவை) சமையும் அளவும் நிலை பெற்றிருக்கும் பாசம் ஸ்தாயி பாவம் (நிலையான பாவம்) எனப்படும். அது காதல், சோகம் முதலாக ஒன்பது வகைப்படும். உலகியலில் உண்டாகும் காதல் முதலியவற்றிற்குக் காரணமாயும் காரியமாயும் துணைக் காரணமாயும் இருப்பவை கவிஞனின் வாக்கிலும் நடிகனின் அபிநயத் திலும் அறிவிக்கப்படும்பொழுது முறையே விபாவம். (நன்கு தோன்றச் செய்வது) என்றும், அனுபாவம் (விபாவத்துடன் இயைந்துள்ளது என்றும் சஞ்சாரி பாவம் (துணை செய்யும் உணர்வுகள்- இது நிலை பேறில்லாத பாவம்) என்றும் வழங்கப்பெறும், காரணம்-விபாவம் காரியம்-அனுபாவம் துணைக்காரணம்-சஞ்சாசிபாவம் என்றும் வழங்கும். இந்த விபாவ அனுபாவங்களால் வெளிப்படுகின்ற ஸ்தாயிபாவமே ரஸம் அல்லது சுவை' என்று பெயர் பெறும் ' என்று விளக்கினார். மேலும் காரணமாகிய இந்த விபாவம் ஆலம்பன விபாவம்' என்றும், உத்திபன வியாவம்' என்றும் பெயர் பெறும் என்றும்; காரியமாகிய அனுபாவமும் இரண்டு வகைப்படும் என்றும் விளக்கினார். இன்னும் தொல்காப்பி யர் கூறும் புது முகம் புரிதல் (மெய்ப்-13) முதலியனவும், கூழை விரித்தல்" (மெய்ப்-14) முதலியனவும் அனுபாவ வகையினுள் அடங்கும் என்றும் ஒப்பிட்டு விளக்கினார். சந்திப்பு நேரிடும் போதெல்லாம் இந்த இரண்டு நூற்பாக் களின் கருத்தை விளக்கிக் கொண்டே இருப்பார். ரஸ்ம் பற்றிய கருத்தை என் தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை (1964), பரணிப் பொழிவுகள் (1972) ,