பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்மொழிப்புலவர் வே.வேங்கடராஜுலு ரெட்டியார் 45 கண்ணன் பாட்டுத் திறன் (1982) என்ற நூல்களில் தெளிவாக்கியுள்ளேன். காரைக்குடி வருகை : நான் காரைக்குடியில் பணி யாற்றிய காலத்தில் (1950-60) ஒரு முறை என் விருத்தி னராக வந்திருந்தார் புலவர் பெருமான். அப்போது காரைக்குடியில் மிகுந்த வறட்சி நிலை நிலவியது. திரு சா. கணேசன் (கம்பனடிப் பொடி), திரு. ராய. சொக்கலிங்கம் முதலிய பெரியார்கட்கு இப்பெருமானை அறிமுகம் செய்து வைத்தேன். புலவர் பெருமானைக் கண்டதில் அவர்கள் பெரு மகிழ்வுற்றனர்- மூன்று நாட்கள் தங்கியிருந்து திரு அரங்கம் சென்றார். நான் திரு அரங்கம் வரையிலும் கூடச் சென்று விட்டு வந்தேன். இறுதிச் சந்திப்புகள் : இவை நான் திருப்பதியில் பணியாற்றியபோது (1960 முதல்) நிகழ்ந்தன. 1963ஆகஸ்டு 28-ம் நாள் திருநாடு அலங்கரித்த வரை நான் திருப்பதியிலிருந்து மாதம் ஒருமுறை இவரைச் சேவித்துத் திரும்புவதுண்டு. ஒருமுறை என்னிடம் கூறிக் கண்ணிச் விட்ட காட்சி இன்னும் என் மனத்தில் பசுமையாகவே உள்ளது. நான் வந்த சமயம் இவருடன் வசித்தவர்கள் இவர் தம் அண்ணியார் (வயது முதிர்ந்த மூதாட்டி) மருமகள் செல்லம்மாள் கைம் பெண்), பேத்தி வசந்தா (எம்.எஸ்.சி. படித்துக் கொண்டிருந்தவள்) பேரன் S.கிருட்டிண மூர்த்தி (பொறியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவன்) கோவிந்தன் என்ற பணியாளன், இல்லத்தின் பின்புறம் கார் நிற்கும் இடத்தில் பருப்பு மூட்டைகளை அடுக்கி வைத்துக் கொண்டு வியாபாரம் செய்து கொண்டிருந்த ரெட்டி இளைஞர் ஒருவர் (திருநெல்வேலிச் சீமையைச் சேர்ந்தவா திரு. R., சக்கரவர்த்தி அய்யங்கார் (வாசன் கம்பெனி மேலாளர்) ஆகியோர். திரு. அய்யங்கார் பகல் நேரத்தில் இவருடன் இருப்பார். தனக்கு ஏதாவது தேவைப்படுமானால் கோவிந்தா என்று குரல் கொடுத்து பணியாளனைத்தான் அழைப்பது வழக்கம். அப்பொழுது