பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்மொழிப்புலவர் வே.வேங்கடராஜுலு ரெட்டியார் 47 சோர்வி னால்பொருள் வைத்ததுண் டாகில் சொல்லு சொல்லென்று சுற்று மிருந்து ஆர்வி னவிலும் வாய்திற வாதே அந்த காலம் அடைவதன் முன்னம் மார்வம் என்பதோர் கோவில் அமைத்து. மாத வன்என்னும் தெய்வத்தை நாட்டி ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலு மாமே." என்ற பெரியாழ்வார் பாசுரத்தை நினைத்துக் கொண் டேன். என் கண்களும் குளமாயின. ஒரு நாள் திரு. R. சக்கரவர்த்தி அய்யங்காரிடமிருந்து தந்தி வந்தது-உடனே புறப்பட்டு வருமாறு தந்திப் படி திருப்பதியிலிருந்து சென்னை வந்து சேர்ந்தேன். ! இப்போது திரு. ரெட்டியார் பேச முடியாது. மயக்க நிலை (Coma) சூழ்ந்து கொண்டது. அரசினர் மருத் துவமனையில் சேர்த்திருக்கின்றோம். பேச்சு நிற்பதற்கு முன் முதல் தந்தி உங்களுக்குத் தரும்படி அவரது கட்டளை. அப்படியே செய்தேன்’ ’ என்றார், உடனே மருத்துவ மனைக்கு விரைந்தேன். உணவு, குளியல் முதலிய வற்றைக் கவனியாமல் நானும் திரு. அய்யங்கார் அவர் களும் மாற்றி மாற்றி மருத்துவ மனையில் இருந்து வந்தோம். இப்படி நான்கு நாட்கள் இருந்ததாக நினைவு. ஒரு நாள் நள்ளிரவு ஆவி பிரிந்தது. அப்போது நானும் அய்யங்காரும் அரைமணி நேரம் மருத்துவ மனையை விட்டு வெளியில் ஏதோ ஒர் அலுவல் நிமித்தம் சென்றிருந் தோம். வந்து பார்த்தால் புலவர் பெருமான் படுக்கையில் இல்லை. விசாரித்ததில் அவர் திருமேனி பிணம் இருக்கும் அறையில் பெட்வீட் சுற்றப்பட்டு வைக்கப் பெற்றிருந்த தைக் கண்டோம். தெர்மாஸ் ஃபிளாஸ்க், ஸ்டீல் கூஜா, டம்ளர் முதலியவை அனைத்தையும் மருத்துவமனைப் பணி ஆட்கள் மறைத்து விட்டனர். பாவிகள்! புலவர் 4. பெரியாழ். திரு . 4. 518