பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 - மலரும் நினைவுகள் பெருமான் அணிந்திருந்த ஆடைகளையும் கவர்ந்து கொண்டனர். வாடகைக் காரில் மயிலாப்பூர் வந்து உறங்கிக் கொண்டிருந்த பேரன் கிருட்டிணமூர்த்தியை எழுப்பி அவனிடம் திருமேனியை எங்களிடம் ஒப்படைக்கு மாறு கடிதம் பெற்று வந்தோம். முறைப்படி மருத்துவ மனையாரிடம் திருமேனியைப் பெற்றோம். பெட்வrட் மருத்துவ மனைக்குரியது” என்று சொல்லி அதை எடுத்துக் கொண்டனர். பிறந்த மேனியாக இருந்த புலவர் பெருமானின் திருமேனியை’ என்னுடைய பட்டு அங்கவஸ் திரத்தால் மூடி எடுத்துக் கொண்டோம். மருத்துவ மனையின் ஆம்புலன்ஸ் வேன் பழுதடைந்து கிடந்தது. மாநகராட்சியில் முயன்றும் பயன், இல்லை. இம்முயற்சியில் மூன்று மணி நேரம் கழிந்தது. இறுதியாக அதிகக் கட்டணம் செலுத்தி வாடகைக் காரில் திருமேனியை இல்லத்திற்குக் கொணர்ந்தோம் . இல்லத் திற்கு வரும்போது அதிகாலை மணி ஐந்தாகி விட்டது. செய்தி பரவியது. வானொலியில் செய்தி பரப்பப் பெற்றதாக நினைவு. சென்னையிலிருந்த ஒன்றிரண்டு உறவினர்கள் வந்து சேர்ந்தனர். செய்தியறிந்து புலவர் பெருமக்கள் பெருந்திரளாக வந்து குவிந்தனர். பல சங்கங்கள் சார்பாக மலர் வளையங்கள் திருமேனியின் மீது வைக்கப் பெற்றன. சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறை சார்பாக டாக்டர் மு. வரதராசன் மலர் மாலை சூட்டினார். எல்லோரும் துக்கச் சூழலில் தவித்துக் கொண்டிருந்தனர். நானும் திரு.R.சக்கரவர்த்தி அய்யங்காரும் கோவிந்தன் பருப்பு ரெட்டியார் இவர்களின் துணை கொண்டு வைணவ மரபுப்படி திருமேனி சுடுகாட்டிற்குச் செல்ல வேண்டிய ஏற்பாடுகள் செய்வதில் ஈடுபட்டோம். பிற்பகல் மூன்று மணி வரை ஏற்பாடுகள் நடைபெற்ற வண்ணமிருந்தன. திருமேனிக்குத் தீர்த்த மாட்டி, இருக்கையில் சாயவைத்து ஆடை உடுத்தித் திருமண் சாத்தி மாலைஅணிவித்தபோது