பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. முத்து. சு. மாணிக்கவாசக முதலியார் திரு. முத்து. சு. மாணிக்கவாசக முதலியார் ஆரணி கழக உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணி யாற்றி வந்தவர். பன்மொழிப் புலவர் வே. வேங்கட ராஜுலு ரெட்டியார் அவர்களின் பரிந்துரையின் பேரில் டாக்டர் அப்துல் ஹாசைன் கயினர் (சென்னைப் பல்கலைக் கழக உருது-அறபு-பாரசீக மொழித்துறைப் பேராசிரியர்) அவர்கட்கு சீறாப்புராணத்தை வெளியிடும் பணியில் உதவுவதற்காகச் சென்னைப் பல்கலைக் கழகத் தில் பணிபுரிந்து வந்தார். அக்காலத்தில் இவர் மயிலாப்பூர் நாட்டு சுப்பராய முதலித் தெருவில் குடியிருந்தார்; அப்போது பன்மொழிப் புலவர் 13, வடக்கூர் செல்வ விநாயகர் கோவில் தெருவிலுள்ள இல்லத்தில் வாசம். சுருங்கச் சொன்னால் சுமார் நூறு அடித் தொலைவில் இருவரும் குடியிருந்தனர். எப்பொழுதும் திருரெட்டியார் விட்டில் இவரைக் காணலாம். 1944-டிசம்பர் என்பதாக நினைவு; நான் வித்துவான் தேர்வுக்குப் படித்து வந்த காலம். சில இலக்கண நூல்களில் ஏற்பட்ட ஐயங்களைத் திர்த்துக் கொள்வதற்காக 25 நாட்கள் திரு. ரெட்டியார் இல்லத்தில் தங்கியிருந்தேன். அப்போது என்னைத் திரு. ரெட்டியார் திரு. முதலியாருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது சென்னையில் உணவுப் பஞ்சம் தலை விரித்தாடிய நிலை; இரண்டாம் உலகப்பெரும் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம்.