பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்து. சு. மாணிக்கவாசக முதலியார் 5互 சில சமயம் திரு. ரெட்டியாருடன் பல்கலைக் கழகம் போய் வந்து கொண்டிருந்தேன். மின்னூர்தியில் (Tram Car) சிவஞான முனிவரின் முதல் சூத்திர விருத்தி பாடம் கேட்டு வந்தேன். ஒரு நாள் திரு முதலியாரை நோக்கி, சுப்புரெட்டியாருக்கு அகநானூறு -களிற்றி யானை நிரையில் முதல் ஐம்பது செய்யுட்களுக்குப் பாடம் சொல்லும் என்று பணித்தார் பன்மொழிப் புலவர். இங்ங்னம் திரு. முதலியாரிடம் அகநானூறு பாடம் கேட்கும் பேறு பெற்றேன். சங்க இலக்கியம் எட்டுத் தொகை நூல்களில் அகநானூறும் பதிற்றுப் பத்தும் தனி யாகப் படிப்பவர்கட்குக் கண்ணைக்கட்டி காட்டில் விட்ட மாதிரி இருக்கும். உரையின் துணைகொண்டு படித்தாலும் கருத்தை மனத்தில் வாங்கிக் கொள்வதே சிரமம். இந்நிலையில் கவிதையதுபவம் எப்படி ஏற்படும்? நல்லா சிரியர் பாடம் சொன்னால்தான் இவற்றில் தெளிவு ஏற்படும். பாடம் கேட்கும்போது கூட இதில் சிரமத்தை உணரலாம். திரு. முதலியார் அவர்கள் பாடம் சொல்லும் போது சங்க இலக்கியங்களின் போக்கையும் ஆங்காங்குத் தொட்டுக் காட்டி விளக்குவார்கள், நல்லாசிரியரின் இயல்புகளைப் பற்றி நன்னூலார் கறுவது: குலனருள் தெய்வம் கொள்கை மேன்மை கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும் உலகியல் அறிவொடு உயர்குணம் இணையவும் அமைபவன் நூல்உரை ஆசிரி யன்னே." என்பது. உயர் குடிப்பிறப்பு, கருணை பெருந்தகைமை, பன்னூற் பயிற்சி, சொல்வன்மை, பூமி மலை நிறைகோல் இவற்றை ஒக்கின்ற குணங்கள், உலகியலறிவு முதலான குணநலங்கள் அமைந்திருப்பவனே நூல் கற்பிக்கும் நல்லாசிரியராவார் என்பது இதன் கருத்து, நிலம் 1. நன்னுரல்-26