பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔器 மலரும் நினைவுகள் பொறுமைக்கும் மலை நீர்வளம் தரும் கொடைக்கும். தராசு நடுநிலைக்கும் மலர் முகமலர்ச்சிக்கும் உவமை களாகக் காட்டப் பெற்றுள்ளன. இந்த நற்குணங்கள் யாவும் திருமுதலியாரிடம் அமைந்திருத்தலைக் கண்டேன். கற்பிக்கும் முறை-பாடம் சொல்லும் முறை-எப்படி யிருக்க வேண்டும் என்பதை, உரைக்கப் படும்பொருள் உள்ளத் தமைத்து விரையான் வெகுளான் விரும்பிமுக மலர்ந்து கொள்வோன் கொள்வகை அறிந்து அவன் உளங்கொளக் கோட்டமில் மனத்தின்நூல் கொடுத்தல் என்ப." என்ற நூற்பாவால் விளக்குவர் அவ்வாசிரியர். கொள் வோன் கொள்வகை அறிந்து' என்பதற்குப் பதிலாகத் தொல்காப்பியர் கொள்வோன் உணர்வகை அறிந்து என்று கூறுவர். பள்ளி மாணாக்கர்போல் நான் தேர்வுக் குப் படித்தாலும், இலக்கியத்தைச் சுவைக்கும் இயல்பு என்னிடம் இருப்பதைக் கண்ட முதலியார் அவர்கள் நான் உணர்ந்து அநுபவிக்கும் முறையில் பாடம் சொன்னார்கள் என்பதை இப்போது நினைவு கூர முடிகின்றது. அகநானூறு பாடத்தைத் தொடங்கும்முன் அக இலக்கியத்தின் அடிப்படைக் கருத்தினைச் சுருக்கமாக விளக்கியதை நினைவு கூர்கின்றேன். இன்ப உணர்ச்சியை-காமத்தை - அடிப்படையாகக் கொண்டது அக இலக்கியம். பருவம் நிரம்பிய உயர்திணை அஃறிணை உயிர்க்கெல்லாம் பொதுவாய் அமைந்து கிடப்பது காம உணர்ச்சி. இவ்வுணர்ச்சிபிறவியிலேயே உடம்போடு ஒட்டிய இயல்புடையது. இத்தகைய இன்ப உணர்வை-காமத் துடிப்பை-சிறந்த முறையில்நெறிப்படுத்திய பொருளாகக் 2. நன்னூல்-36