பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்து. சு. மாணிக்கவாசக முதலியார் 5リ --- கொண்டவை அகத்திணைப் பாடல்கள். இந்தப் பாடல் கள் சித்திரித்துக் காட்டும் அகத்தினை உலகில் தலைமை மாந்தர்களாக விளங்குவோர் தலைவனும் தலைவியும். இவர்தம் காதல் தழைத்து வளர்ந்து கணவன்-மனைவி யாக ஆவதில் பல நிலைகள் உள்ளன. இவர்களைப் பெயர் சுட்டிக் கூறும் வழக்கம் இல்லை. அக இலக்கியத்தில் இவர் தம் காதல் நிகழ்ச்சிகளாக வருவன சமுதாயத்தினின்றும் நல்லனவாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவையாகும். மக்கள் நுதலிய அகன்’ என்று தொல்காப்பியரும் இதனைக் காட்டுவர். அகத்தினையில் காணப்பெறும் தலைவனிடம் ஒரு சில குறைகள் காணப்பெற்றாலும் தலைவி ஒரு குறிக் கோள் மகளாகவே சித்திரித்துக் காட்டப் பெறுகின்றாள். இல்லத்தில் சொல்லுரிமை உடையவள் இவள் என்பதைத் தொல்காப்பியர் அஞ்ச வந்த உரிமை என்று சிறப்பிப்பர். இல்லற வாழ்க்கையில் இவர்கள் இருவரும் ஒருயிரும் ஈருடலும் போன்றிருப்பர்; இவர்தம் தொடர்பு பிறவி தோறும் தொடர்ந்து வருவதாகக் கூறப்பெறும். 'தலைவியின் நற்றாய், தந்தை, செவிலி, தோழி, பரத்தையர் ஆகிய அறுவர் ஏதோ ஒரு முறையில் தலை மக்களுடன் உறவுடையோராகக் கொள்ளப் பெறுவர். இவர்களுள் தோழியின் பெரும் பங்கு களவு நெறியிலும், செவிலியின் பங்கு கற்பு நெறியிலும் காணப்பெறும். அக வுலகில் தோழியைப்போன்ற ஒர் அற்புதப் படைப்பினைக் காண்டல் அரிது. இவளிடம் மட்டிலும் தலைவி நன்கு நெருங்கிப் பழகுவாள். தலைவனின் தந்தை, தாயைப் பற்றி நேரான தொடர்புள்ள குறிப்புகள் அக இலக்கியத்தில் இடம் பெறவில்லை; தலை மக்களுடன் ஏதோ ஒரு முறையில் தொடர்புடையவர்கள் கண்டோர், அறிவர், பாணன், பார்ப்பார், விறலியர், கூத்தர், இளையோர், விருந்தினர், தேர்ப்பாகன் என்ற ஒன்பதின்பர். இவர்களுள்ளும் பாணன், தேர்ப்பாகன் ஆகியோரின் பங்கே அதிகமாகக் காட்டப் பெறுகின்றது.