பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔釜 மலரும் நினைவுகள் இந்தக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு அகப் பாடல்களைக் கற்க வேண்டும் என்று கூறினார்கள் திரு. முதலியார் அவர்கள். திரு. முதலியாரவர்கள் கற்பித்த முறை டி. கே. சி. அவர்கள் ஒரு பாடலை விளக்கும் முறைபோல் இருந்தது. பாடலை அறியச் செய்ததை விட உணரச் செய்ததுதான் இவர்கள் கற்பித்த முறையின் உயிராக இருந்தது. பாட்டின் கருத்தை விளக்கும் போக்கில் கூற்றை விளக்கு வார்; பாட்டு எழுந்த நிலையைத் தெளிவாக்குவார். முதலில் பாடலை இசையுடன் பாடுவார்; அநுபவித்துப் பாடுவார் ரசிகமணி டி. கே. சி அவர்கள் பாடுவதைப் போல! அடுத்து, சொற்களின் புணர்ச்சியைப் பிரித்துக் கொண்டே வேறோர் இசையில் பாடுவார். பாடிக் கொண்டே போகும்போது கடின சொற்களின் பொருளை விளக்கிக் கொண்டே போவார். பாடலின் இறுதியடியைப் பிடித்துக்கொண்டு கீழிருந்து மேலே போவார்-தெருவில் நெசவாளர்கள் பாவு ஒடுகிற மாதிரி. பாம்பு பிடிப்பவன் முதலில் பாம்பின் தலையை அமுக்கிக் கொள்ளும் போது பாம்பு உடல் முழுவதையும் நெளித்துக் காட்டுவது போல இப்போது விரைப்பாக இருந்த பாடலின் வடிவம் கட்டு சிறிதளவு தளர்ந்ததுபோல் காட்டும். சிவகாசி வெடிச்சரத்தின் முடிச்சினை அவிழ்த்து விட்டு அச்சரத்தை ஆட்டினால் வெடிகள் தனித்தனி யாகப் பிரிந்து உதிர்வது. போல்இவர் பாடலைக்கீழிருந்து மேலே பாடிக் கொண்டே போகும்போது சொற்களின் பொருளும் பாட்டின் முழுப்பொருளும் பாடலிலிருந்து கட்டவிழ்த்துக் கொண்டு என் மனத்தில் பாய்ந்துவிடும். 'நீர் நிறம் கரப்ப (அகம்-18) என்ற அகப்பாட்டை விளக்கின பாங்கினை இப்போது நினைவுகூர்கின்றேன். நீர்நிறம் கறப்ப ஊழுறு புதிர்ந்து பூமலர் களுலிய கடுவரற் கான்யாற்றுக்