பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்து. சு. மாணிக்கவாசக முதலியார் 5潔 கராஅந் துஞ்சுங் கல்லுயிர் மறிகழி மராஅ யானை மதந்தப ஒற்றி உராஅ ஈர்க்கும் உட்கு வரு நீத்தங் கடுங்கட் பன்றியின் நடுங்காது துறந்து நாம அருந்துறைப் பேர்தந் தியாமத் தீங்கும் வருபவோ ஓங்கல் வெற்ப! ஒருநாள் விழுமம் உறினும் வழிநாள் வாழ்குவள் அல்லவென் தோழி யாவதும் ஊறில் வழிகளும் பயில வழங்குநர் நீடின் றாக இழுக்குவர் அதனால் உலமரல் வருத்தம் உறுதுமெம் படப்பைக் கொடுந்தேன் இழைத்த கோடுயர் நெடுவரைப் பழந்துளங்கு நளிப்பில் காந்தளம் பொதும்பில் பகல்நீ வரினும் புணர்குவை அகன்மலை வாங்கமைக் கண்ணிடை கடுப்பயாய் ஒம்பினள் எடுத்த தடமென் தோளே. இது கபிலர் பாடியது. தோழிக்கூற்று. இரவு வருவானைப் பகலில் வா’ என்றது. தலைவன் இரவுக் குறியை நாடி அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றான். தோழி இவனைப் பார்த்து, வழியில் பல ஆபத்துகள் உள்ளன. ஒரு நாள் உனக்குத் துன்பம் வந்துற்றாலும் மறு நாள் என் தலைவி உயிர் வாழாள். இதனால் எங்கட்கு வருத்தம் வந்தெய்தும். ஆதலால் இரவில் வாரற்க. எங்கள் தோட்டத்தை அடுத்துள்ள மன்லச்சாரலில் பழச் சோலை ஒன்று உள்ளது . ஆங்கு நீ பகலில் வருக. தலைவி யைச் சந்திக்கலாம்’ என்று பாடல் கருத்தை விளக்குவார். பாடலை ஒரு முறை இசையுடன் படிக்கின்றார்: அடுத்த முறை பதம் பிரித்துப் படிக்கின்றார். பின்னர் கீழிருந்து மேலே போகின்றார். பாடலின் முற்பகுதி தலைவன் இரவில் வரும் வழியை விளக்குகின்றது என்றும், 3. இரவில் சந்திக்கும் இடம் இரவுக்குறி, பகலில் சந்திக்கும் இடம் பகற் குறி.