பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔合 மலரும் நினைவுகள் இரண்டாவது பகுதி தலைவன் வரும் வழியில் அவனுக்கு ஏதாவது விபத்து நேரிட்டால் தலைவி உயிர் வாழ முடியாது என்பதைக் கூறுகின்றது என்றும், மூன்றாவது பகுதி தலைவியின் தோட்டத்திற்கு அருகிலுள்ள பழங்கள் தொங்கும் சோலைக்கு பகலில் வந்தால் தலைவியைச் சந்தித்து மகிழலாம் என்றும் கூறி விளக்குகின்றார். நான்காவது முறை படிக்கும்போது கடின சொற் களின் பொருள் விளக்கம் தருகின்றார். கரப்ப-மறைய, ஊழ் உறுபு-முதிர்ந்து; பூமலர்-அழகிய மலர்கள்; களுவிய- நெருங்கிய; கடுவரல்-கடுகிவருதல்; கான்யாறுகாட்டாறு: கரா-முதலை; துஞ்சும்-தங்கும்; கல் உயிர் மறி கழி-கல்லில் மோதி மீளும் சுழிகள்; மரா-(இனத் தோடு) மருவாத; மதம்தப-மதம் கெட; ஒற்றி-மோதி: உரா-வலியுற்று ஈர்த்தல்-இழுத்தல்; உட்குவரும்அச்சம் தோன்றும்; நீத்தம்-வெள்ளம்; கடுங்கண்அஞ்சாமை; பன்றியின்-பன்றியைப் போல; நடுங்காது துறந்து-நடுங்குதலின்றிக் கடந்து ஏறி; நாம-அச்சந் தரும்; பேர்தந்து-பேர்ந்து (தாண்டி), யாமம்-நள்ளிரவு: ஈங்கும்இத்தகைய இடத்து; வருடவோ-வருவாரும் உளரோ, விழுமம்-துன்பம்; வழிநாள்-மறுநாள்: ஊறு-இடையூறு: பயில வழங்குநர்-பலகாலும் போய் வருவா, இழுக்குவர்= தவறு எய்துவர்; உல மரல்-மனம் சுழலுதல்; வாங்குவளைந்த அமை-மூங்கில்; கண் இடை-கணுக்கட்கு நடுவில்; கடுப்ப-ஒக்க; பாய்-அன்னை: ஒம்பிய-போற்றி வளர்த் த; தடமென்தோள்-தலைவி, படப்பை-தோட்டம்; கொடு தேன்-வட்டமாகிய தேன் அடை இழைத்த-வைக்கப் பெற்ற; கோடு-சிகரம்; நெடுவரை மலை, நளிப்பு-மரச் செறிவு; பொதும்பு-புதர்; புணர்குவை-பொருந்துவை: இவ்வாறு விளக்கம் தந்து கொண்டே படிக்கின்றார். இத னால் வாயில் போட்ட கற்கண்டு கரைகின்றது போல பாட்டின் பொருள் துலங்கத் தொடங்குகின்றது.