பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூத்து. சு. மாணிக்கவாசக முதலியார் を締7 பின்னர் பாடலைக் கீழிருந்து படித்துக் கொண்டு மேலே போகின்றார். தாய் போற்றி வளர்த்த என் தலைவியை நீ அடையலாம்; அவள் எப்படிப்பட்டவள்? மூங்கிலின் கணுக்களுக்குஇடையிலுள்ள இடத்தையொத்த தோளினையுடையவள். எப்பொழுது வரலாம்? பகலில், எங்கு? எம் தோட்டத்திற்கு அருகில் தேன் அடை வைக்கப் பெற்ற மலை ஒன்று உள்ளது. அதன் அருகில் பழங்கள் தொங்குகின்ற சோலை ஒன்று உள்ளது. அங்குள்ள புதரில். நாங்கள் வருத்தம் அடைவது ஏன் தெரியுமா? நீ வந்து போகும் வழிகள் கொடியவை. அந்த வழிகளில் அடிக்கடி போய் வருவார் கூட தடுமாறிப் போவர். அதனால் நீ அந்த வழிகளில் வருவது குறித்து நாங்கள் வருந்துவோம். அந்த வழிகளின் தன்மைகள் யாவை? வழியிலுள்ள காட்டாறு மிகக் கொடியது. நீரின் நிறம் மறையும்படி யாக பூக்கள் நிறைந்த வெள்ளம் கடுகி வருகின்றது. அந்த ஆற்றங்கழிகளில் முதலைகள் தங்கியிருக்கும். ஆற்றின் வெள்ளம் தம் இனத்தை விட்டுப் பிரிந்து நிற்கும் களிற்றி யானையையும் அடித்துக் கொண்டு போகக் கூடியது. இந்தக் கடுவழியில் அச்சம் தவிர்ந்த பன்றியைப்போல் சிறிதும் அஞ்சாது வருபவரும் உளரோ? என்கின்றாள் தோழி. இப்படிப் பாடலை ஆந்திர ரசவகை மாம் பழத்தைப் பிசைவதுபோல் பிசைகின்றார். பின்னர் இறுதியாகப் பாடலை இசையுடன் படிக்கின்றார். ரச மாம்பழத்தைக் காம்பில் துளையிட்டு அதன் சாற்றை உறிஞ்சினால் நாம் பெறும் இன்பத்தைப்போல் பாட்டின் முழு கருத்தும் நம் அநுபவமாகிவிடுகின்றது. அடுத்து, இதிலுள்ள இறைச்சிப் பொருவை விளக்கிக் காட்டுவார். உள்ளுறை உவமத்திற்கும் இறைச்சிக்கும் உள்ள வேறு பாட்டை விளக்கு வார். 鲨 甄 莓 1946-49 வரை திரு. முதலியாரிடம் கடிதத் தொடர்பும் இருந்தது. அதன் பிறகு அடிகளார் சீறாப்