பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

お尋 மலரும் நினைவுகள் புராணம் பதிப்பிக்கும் திட்டம் முடிந்து எங்குச் சென்றார் என்பது தெரியவில்லை. 1963-பன்மொழிப் புலவர் திருநாடு அலங்கரிக்கும் வரை அவர் இல்லத்திற்கு வந்துபோய்க் கொண்டிருந்தேன். ஒருமுறையாவது திரு . முதலியாரவர்களைச் சந்திக்கும் வாய்ப்பில்லை. நான் காரைக்குடியில் பணியாற்றியபோதும் (1956–60) திருப்பதியில் பணியாற்றியபோதும் (1960-77)-1968 ஆண்டு வரை திரு. முதலியாரவர்களைச் சந்திக்கவே இல்லை. ஆனால், திரு. முதலியாரவர்கள் தருமையா தீனத்தின்கீழ் இயங்கி வந்த புலவர் கல்லூரியில் சில ஆண்டுகள் பேராசிரியராகவும் மற்றும் சில ஆண்டுகள் முதல்வராகவும் பணியாற்றியதாகவும் அறிந்திருந்தேன். அங்குத்தான் துறவறத்தை மேற்கொண்டு ஞானப்பிரகாச அடிகள் என்ற திருநாமத்துடன் காஞ்சித் தொண்டை மண்டல முதலியார் மடத்தில் மடாதிபதியாக எழுந்தருளி யிருந்தார் போலும். அடிகளாரைச் சந்தித்தபோது இந்த விவரங்களை எல்லாம் அவரிடம் தெரிந்து கொள்ள எனக்குத் தோன்றவில்லை. விரும்பவும் இல்லை. 1969-இல் நான் திருப்பதியிலிருந்தபோது குடும்பத் துடன் காஞ்சி, மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் முதலான இடங்களைச் சுற்றிப் பார்க்கத் திட்டம் இட்டுச் சுற்றி வருகையில் காஞ்சிக்கு வந்திருந்தோம். அப்போது திரு. முத்து. சு. மாணிக்கவாசக முதலியார் துறவற நெறியை மேற்கொண்டு ஞானப் பிரகாச சுவாமிகள் என்ற திருப் பெயருடன் காஞ்சி தொண்டை மண்டல முதலியார் மடத்தின் தலைவராக எழுந்தருளியிருந்ததைத் திருப்பதி யில் மிதிவண்டிக் கடை வைத்திருந்த அவர் மகன்மூலம் கேள்வியுற்றிருந்தேன். இதனால் சுவாமிகளைச் சேவிக்கும் பேறு பெற்றேன். இந்தப் பயணத்தின்போது மூன்று நாட்கள் மடத்தில் தங்கியிருந்தோம். அப்போது மடத்தின் சொத்து நிர்வாகம் வழக்கில் மாட்டிக் கொண்டிருந்தது. அடிகட்கு காப்புச் செலவிற்காக ஒரு சிறு தொகை வழங்கப்