பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பெருந்தவத்திரு சித்பவானந்த அடிகள் திருப்பராய்த்துறைப் பெருந்தவத்திரு சித்பவானந்த அடிகளை யதிர்ாசர் (துறவிகட்கெல்லாம் அரசர்) என்று சொல்லி வைக்கலாம். இத்திருநாமம் இராமாநுசருக்கு வழங்கிவந்தது. திருச்சி-கரூர் இருப்பூர்திப்பாதையில் உள்ள திருப்பராய்த்துறை என்பது பாடல் பெற்ற திருத்தலங் களில் ஒன்று. அகண்ட காவிரிக் கரையின் தென்பால் உள்ளது இத்திருத்தலம். ஞானசம்பந்தப் பெருமான், நாவுக்கரசர் பெருமான் என்ற தேவார முதலிகளின் திருப் பாடல்கள் பெற்ற திருத்தலம்." விடையும் ஏறுவர் வெண்பொடிப் பூசுவர் சடையில் கங்கை தரித்தவர் படைகொள் வெண்மழு வாளர் பராய்த்துறை அடைய நின்ற அடிகளே (1.1.35:7) - என்பது சம்பந்தர் தேவாரம். போது தாதொடு கொண்டு புனைந்துடன் தாத விழ்சடைச் சங்கரன் பாதத்துள் வாதை தீர்க்க.என் றேத்திப் பராய்த்துறைச் சோதி யானைத் தொழுதெழுந் துய்ம்மினே (5.30:5) என்பது அப்பர் தேவாரம். இத் திருத்தலத்தைத் தேர்ந் தெடுத்து இராமகிருஷ்ண தபோவனம், விவேகானந்த 1. சம்பந்தர் 1 135; அப்பர் 5.30,