பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தவத்திரு சித்பவானந்த அடிகள் 63 புகழுடனும் திகழ்கிறது என்றால் அது அடிகளின் ஆசியே காரணம் என்று இன்றளவும் கருதி வருகின்றேன். பள்ளிக்குச் சரியான கட்டடம் இல்லை. ஏற்கனவே தமிழ் எழுத்து ட போலக் கட்டின ஒட்டுக் கட்டடத்தைப் பல அறைகளாகத் தடுத்து வகுப்பறைகளாக்கப் பெற்றன. இரண்டு அறைகள் ஒட்டுக் கட்டடத்தில் அமைந்தன. ஒரு பக்கம் இரண்டு குடும்பங்கள் தங்குவதற்காகத் தடுக்கப் பெற்ற ஒன்றில் நான் குடியிருந்தேன். தேன் கூட்டில் இராணி ஈ தங்குவது போன்ற மிகச் சிறிய இடம். மற்றொரு பகுதி தலைமையாசிரியர் அறையாகவும் இதிலுள்ள அறைகள் தளவாடங்கள் வைக்கப் பயன்பட் டன. நான்கு வகுப்பறைகள் கீற்றுக் கொட்டகைகளில் இருந்தன.அடிகளாருக்கும் திரு.சகந்நாத ரெட்டியாருக்கும் மிக எளிய முறையில் என் இல்லத்தில் அமுது படைக்கப் பெற்றது . இரவில் தங்குவதற்கு தலைமையாசிரியர் அறையில் தரையில் பாப்போட்டு சயனத்திற்கு ஏற்பாடு செய்தேன். ரூ 50/-மாத வருவாயில் நான் காலம் தள்ளின காலம் அது. அடிகளாருக்குத் தங்குவதற்கு நன்கு வசதி செய்ய முடியவில்லையே என்று அன்று உணர்ந்தேன். ஆனால் அடிகளார் மனமுவந்து எழுந்தருளி விழாவைச் சிறப்பித்தது அனைத்தையும் மறக்கச் செய்துவிட்டது. ஊர்ப்பெருமக்கள் திரண்டு வந்து அடிகளாரைப் பெருமைப் படுத்தினர். நகரத்திலிருந்து பள்ளி சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலிருந்தமையால் மக்கள் வருவதற்கும் திரும்புவதற்கும் சிரமமாக இருக்கும். நடராஜா சர்வீஸைத் தவிர வேறு வசதிகள் இல்லை. குதிரை வண்டி கள்தாம் கிடைக்கக்கூடிய ஒரே வகை வாகனம். அதிகாலை யில் இருவரையும் பேருந்தில் ஏற்றித் திருச்சிக்கு அனுப்பி வைத்தேன். ஆண்டு விழா தொடங்கின நாள் முதல் அடிகளாரின் ஆசி இடையறாது என்னைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது .