பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿感 மலரும் நினைவுகள் நினைவு-2: 1946இல் என நினைக்கின்றேன்.இதற்குள் தபோவனத்தில் கட்டட வசதிகள் நன்கு அமைந்து விட்டன. மாணவர்க்கென ஆண்டில் ஒருமுறை மூன்று நாட்கள் அந்தர் யோக முகாம் நடத்தத் தொடங்கினார் அடிகளார். இந்த முகாயில் அறுபது மாணவர்கள் தேர்ந் தெடுக்கப்பெற்றிருந்தனர். ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் தலைமையாசிரியரால் தேர்ந்தெடுக்கப்பெற்ற இரண்டு மாணவர்கள் கலந்து கொள்ளலாம். நான் என் பள்ளி இரண்டு மாணவர்களுடன் அந்தர் யோகத் தில் கலந்து கொண்டேன். அடிகளார் இளம் சமூகத்தின ரிடம் பரிவு கொண்டு, அவர்களை நல்ல குடிமக்களாக்க வேண்டும் என்று தபோவனச் செலவில் இந்தத் திட்டத். தைச் செயற்படுத்தி வந்தார். முற்பகல் 8 மணி முதல் பிற்பகல் 5 மணி முடிய திட்டம் செயற்படும். அடிகள் முற்பகலில் ஒரு மணி நேரமும் பிற்பகலில் ஒருமணி நேர மும் சொற்பொழிவாற்றுவார். இரவு 8 மணி முதல் 9மணி வரை கேள்வி நேரம்’ என்று ஒன்று இருந்தது. அந்த நேரத்தில் மாணவர்கள் சமயம், ஒழுக்கம் முதலியவை பற்றி வினாக்களை விடுக்கலாம். அடிகள் அவற்றிற்கு, அமைதியாக, பொருத்தமாக, மாணவர்கள் மனம் கவரும் வண்ணம் அற்புதமாக விடைகள் தருவார். இந்த நேரம் மிகவும் கவர்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கும். நான் விடுத்த வினாவும் அடிகள் அதற்குத் தந்த விடையும் இன்றளவும் என் மனத்தில் பசுமையாக உள்ளனர். கான் : சுவாமி, அத்வைதம், விசிட்டாத்வைதம், துவைதம் இம்மூன்றிற்கும் உள்ள வேறு பாட்டை விளக்கி அருள வேண்டும்’ என்றேன். அடிகள் : இந்த வினாவைப் பரமஹம்சர் காலத்தி லேயே சீடர் ஒருவர் அவரிடம் கேட்டார். அதற்கு அவர் அளித்த விடையையே உங்கட்குச் சொல்லுகின்றேன்.