பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தவத்திரு சித்பவானந்த அடிகள் 65。 இந்த வினா மூன்று தத்துவங்களிலும் பரமான்மாசீவான்மா இவர்களிடையேயுள்ள உறவு முறையைப் பற்றியது. ஒருவர் ஏதோ ஒரு பயணத்தை மேற்கொள்ளு கின்றார். வழிப்பயணத்தில் பசியை ஆற்றிக்கொள்வதற்கு ஆற்றுணா (கட்டமுது) எடுத்துச் செல்லுகின்றார். இப்பொழுது இரண்டு பொருள்கள் இவரிடம் உள்ளன. ஒன்று இவர், மற்றொன்று, கட்டமுது, இது துவைதம். துவைதத்தில் ஆன்மா பரமான்மா தனித் தனியான பொருள்கள் -ஆள் கட்டமுது இரண்டும் தனித்தனியாக இருப்பது போல. சில கல் தூரம் நடந்து செல்லு கின்றார். பசி வருகின்றது. வழியில் காணப்படும் சோலை சூழ்ந்த குளத்தங்கரையில் தங்கி உணவு கொள்ளுகின்றார். இப் பொழுது கட்டமுது இவர் வயிற்றில் உள்ளது. இது விசிட் டாத்வைதம். இங்கு ஆளும் கட்டமுதும் தனித்தனியாக இருப்பது காணப்பட்டாலும் இரண்டும் ஒரே இடத்தில் நெருங்கியுள்ளன. விசிட்டாத்வைதத்தில் ஆன்மாவும் பரமான்மாவும் தனித்தனியாக இருப்பினும் ஒன்றை யொன்று சார்ந்துள்ளன. இன்னும் சில கல் தூரம் நடந்து செல்லுகின்றார் இப்பயணி. வயிற்றில் கட்டமுது இல்லை. அது செரிமானம் ஆகி பயணியுடன் இரண்டறக் கலந்து விடுகின்றது. அத்வைதத்திலும் ஆன்மா பரமான்மாவுடன் இரண்டறக் கலந்து விடுகின்றது. இவ்வாறு இராமகிருஷ் னர் சீடருக்கு விளக்கினார்’ என்று கூறி முடித்தார். இந்த அளவு மாணவர்க்குத் தெளிவாகும். தொடர்ந்து வயதான ஒரு சிலருக்கு இரண்டு எடுத்துக் காட்டுகளைக் கொண்டு அத்வைதத்தை விளக்கினார் அடிகள். ஒரேயொரு மூலப்பொருளாயுள்ள பிரம்மமே பல சீவன்கள் ஆகின்றது, பிரம்மமும் சீவர்களும் அடிப் படையில் ஒன்றென்பதை உணர்த்தவே வேதாந்திகள் பிரம்மத்தைப் பரமான்மா என்றும், சீவர்களைச் சீவான்மா எனவும் வழங்குகின்றனர். பிரம்மமே உலகமாக வும் உயிர்களாகவும் ஆகின்றது என்பது அத்வைதக் ம நி-5