பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 6 மலரும் நினைவுகள் கொள்கை. ஆனால் பிரம்மம்.உலகமாகத்தோன்றுவதற்கும் அதுவே உயிர்களாவதற்கும் வேற்றுமை உண்டு. பிரம்மம் உலகம் ஆவதை ஓர் எடுத்துக்காட்டால் விளக்கலாம். ஒருவருக்குக் கயிறு பாம்பாகத் தோன்றுகின்றது. இங்குக் கயிற்றைப் போலவே பாம்பும் ஓர் உள்பொருள். அந்த நேரத்தில் அவ்விடத்தில் இல்லாத பொருளானாலும் அஃது என்றுமே எவ்விடத்திலும் இல்லாத பொருளல்ல. பாம்பு உள்ள பொருளாயும் நாம் முன்பே அறிந்தபொருளா யும் இருப்பதால்தான் கயிற்றைக் கண்டதும் அதன் நினைவு வருகின்றது. இந்த உவமையில் உண்மை தெரிந்த தும் அங்கு பாம்பு என்னும் பொருளுக்கே இடம் இல்லை. ஒரு வெண்ணிறப் பூவைச் செந்நிறக் கண்ணாடி வழியாகப் பார்க்கும்பொழுது அப்பூவும் செந்நிறப்பூவாகவே தோன்றுகின்றது. இங்கு உண்மை தெரிந்ததும் பாம்பு இல்லாததுபோலப் பூ என்ற பொருளும் இல்லாது போகாது. அதன் ஓர் இயல்பு மட்டிலுமே இலதாகும். கயிறு பாம்பாகின்றபோது பொருளே மாறுகின்றது. ஆனால் வெண்ணிறப்பூ செந்நிறப்பூ ஆகின்றபோது பொருள் மாறவில்லை. அதன் ஒரு கூறுமட்டிலுமே மாறு கின்றது. கயிறு பாம்பாகத் தோன்றும் உவமை பிரம்மம் உலகமாகத் தோன்றுவதை விளக்குகின்றது. வெண்ணிறப் பூ செந்நிறப் பூவாகத் தோன்றுவது பிரம்மம் சீவனாவதை விளக்குகின்றது. முதல் உவமையில் பொருள் ஒன்று அல்ல. ஆனால், இரண்டாவது உவமையில் பொருள் ஒன்று; இயல்புதான் வேற்றுமை. இதிலிருந்து பிரம்மமும் சிவர் களும் ஒன்றென்பதும் இயல்பிலே தான் வேற்றுமை என்ப தும் புலனாகும். இவ்வாறு அத்வைதத்தைப் பெரியவர் கட்கு விளக்கினர்.” நினைவு-3 1950 ஜூலை முதல் நான் காரைக்குடியில் புதிதாகத் தொடங்கப்பெற்ற ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி 3. பிரம்மத்தைத் தாயுமான அடிகள் பெரிய பொருள்' என்று மொழி பெயர்ப்பர்(பொ. வ-8).