பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தவத்திரு சித்பவானந்த அடிகள் 色? யில் பணியேற்றேன். 1950-51, 1951-52 ஆகிய இரண் டாண்டுகள் கேரளாவில் திருச்சூரில் அரசகுடும்பத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஐ. நாராயணமேனன் என்பாரும் (ஐ. என். மேனனே வழக்கிலுள்ள பெயர்) 1952-53, 1953-54இல் பேராசிரியர் எஸ். சீநிவாசன் என்பாரும் கல்லூரி முதல்வர்களாக இருந்து வந்தனர். முதல்வர் சீநிவாசன் காலத்தில் கல்லூரி மூன்றாவது ஆண்டு விழா விற்கு அடிகளாரை அழைக்க வேண்டும் என்ற என் பரிந் துரை ஒப்புக்கொள்ளப் பெற்றது. அடிகளாரைக் கூட்டிவர என்னையே காரில் திருப்பராய்துறைக்கு அனுப்பினர். ஆண்டு விழாவில் அடிகளாரின் சொற்பொழிவு அற்புதமாக அமைந்தது. சொற்பொழிவின் சாரம் பயிற்சிபெறும் ஆசிரியர்கள் தம்மிடம் பயிலும் மாணாக்கர்களை ஆஞ்சனேயர் போன்று ஆற்றல், ஒழுக்கம், பாண்டித் தியம் முதலிய பண்புகள் நிறைந்தவர்களாக உருவாக்கப் பாடுபடவேண்டும் என்பது . என்னுடன் பணியாற்றிய கணிதப் பேராசிரியர் எஸ். கிருஷ்ண அய்யங்கார் அவர் கள் என்ன மிஸ்டர் ரெட்டியார், உங்கள் சாமியார் 4. இவர் சென்னை மாநிலக்கல்லூரியில் தத்துவப் பேராசிரியராக இருந்து ஒய்வு பெற்றவர், 5. இவர் அழகப்பர்கலைக் கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றிவந்தவர்; பல ஆண்டுகள் மதனபள்ளியில் உள்ள ஓர் இடைநிலைக் கல்லூரியில் பல்லாண்டுகள் பணியாற்றிவந்த இவரை 1948இல் வள்ளல் அழகப்பர் கலைக்கல்லூரியைத் தொடங்கின போது இவரைப் பேராசிரியராகக் கொணர்ந்தார். திரு. சீநிவாசன் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய போது , வள்ளல் உயர்நிலைப் பள்ளிக் கல்வி பெற்ற போது அவருக்குத் தனிப் பயிற்சி ஆசிரியராக (Tutor) இருந்தவர்.