பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 & மலரும் நினைவுகள் தினைவு-:ே 1960 ஆகஸ்டு முதல் 1966 ஏப்பிரல்மே முடிய குடும்பத்தைவிட்டுத் திருப்பதியில் மாணியாக வாழ்ந்து வந்தேன். மூத்த மகன் இராமலிங்கம் பி. யு. சி. தாண்டி விட்டான். அவனைத் திருப்பதியில் இளங்கலை வகுப்பில் சேர்க்கத் தீர்மானித்தேன், இளையமகன் மூன்றாம் படிவம் தாண்டிய நிலையில் இருந்தான். அவன் தமிழில் பாடங்கள் பயின்றவனாதலாலும் திருப்பதியில் ஆங்கிலத்தில் படிக்க வாய்ப்பு இருந்தாலும் உயர்நிலைப் பள்ளி அளவில் தமிழ் கற்பிக்கும் வசதி இல்லாததாலும் அவனை விவேகாநந்த வித்தியாவன உயர்நிலைப் பள்ளியில் படிக்கவைக்க எண்ணி அடிகளாரை மாலை நான்கு மணி சுமாருக்குத் தபோவனத்தில் சந்தித்தேன். இது 1966 பிப்பிரவரி மார்ச்சுத் திங்களில் நடை பெற்ற தாக நினைவு. நான் சென்றபோது அடிகளாரின் அறையில் கூட்டம் அதிகமாக இருந்தது. இளந்துறவிகள் விழுந்து வணங்கி ஆசி பெற்றுக் கொண்டிருந்தனர். இறுதியாக நானும் கிடந்த வண்ணம் அடிகளின் ஆசி பெற்றேன். என்ன ரெட்டியார், நான் தென்காசியில் நாளை நடைபெற இருக்கும் அந்தர் யோகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருக்கின்றேன். மாலை 5.45 இருப்பூர்தி யைப் பிடிக்கவேண்டும். ஏதாவது முக்கிய வேலையாக வந்தீர்களா?' என்று வினவினார். ஆம் சுவாமி: காரில் போகும் போதே பேசிக் கொள்ளலாம் என்றேன். சிற்றுண்டி?’ என்றார். சுவாமி அது முக்கியமல்ல; சுவாமியைக் கண்டு பேசுவதே முக்கியம்’ என்றேன். 3-30 மணி சுமாருக்கு இருவரும் காரில் ஏறினோம். காரிலேயே நான் வந்த வேலையைத் தெரிவித்தேன். 'இந்த ஆண்டு குடும்பத்தைத் திருப்பதிக்கு மாற்ற வேண்டும். என் இளைய மகன் இராமகிருஷ்ணன் மூன்றாவது படிவம் முடித்து ஜூனில் நான்காம் படி வத்தில் நம் வித்தியாலயத்தில் சேர்க்கஎண்ணித்தங்களிடம் பேச வந்தேன்' என்றேன். சேர்த்துக் கொள்வதில் தடை