பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தவத்திரு சித்பவானந்த அடிகள் 75 காப்பி அருந்திக் கொண்டு உரையாடி மகிழ்ந்தோம். அவர் நான்கு ஆண்டுகட்கு முன்னர் முக்தியடைந்து விட்டார்: சென்ற ஆண்டு (1986) அடிகள் திரு நாடு அலங்கரிப்பதற்கு முன்னதாக அடுத்து வரும் அடிகளாரை வரவேற்பதற்குப் போய் விட்டார் போலும் என்று என் மனம் எண்ணுகின்றது. நினைவு-5 : நான் திருப்பதியில் பணியாற்றிய போது சிறுவர்க்காக நமது உடல் என்ற நூல் வெளி யிடும் நிலையில் இருந்தேன் (1956 சனவரி). இதை அடிகளாருக்கு அன்புப் படையல் செய்து ஆசிபெற நினைத்தேன். தவத்திரு சாந்தானந்தா அவர்கட்குக் கடிதம் எழுதி அடிகளாரின் ஒளிப்படம் ஒன்று அனுப்பு மாறும் அன்புப்படையல் செய்ய இசைவு கோருமாறும் கேட்டிருந்தேன். அடிகள் நூலை விவேகானந்த அடிகட்குப் படைக்குமாறுகூறி ஒளிப்படம் அனுப்ப இசைவு தர மறுத்து விட்டதாக தவத்திரு சாந்தானந்தாமறு மொழி தந்துவிட்டார். நான் அடிகளாரிடம் பழகிய நாள் தொட்டு அடிகள்தாம் எனக்கு தமிழக விவேகாநந்த ராகக் காட்சியளிக்கின்றார் என்று கருதுகின்றவனாதலின் அடிகளாருகே, வங்கநாடு ஈன்ற நரேந்திரன் கண்ட மாண்புறு கற்பனை வித்தைத் துங்கமார் கல்விச் சாலைகள் மலிந்து துாயநல் தபோவன மாக்கிப் பொங்கிய ஞானத் திங்கனி தந்து புவியெல்லாம் நுகர்ந்திடச் செய்யும் எங்கள் மா முனிவர் சித்பவா நந்தர்க் கிச்சிறு நூலுரித் தாமால். என்ற பாடல் மூலம் அன்புப் படையலாக்கினேன். தவத்திரு சாந்தானந்தா அவர்கட்கு ஒருபடி அனுப்பி அடிகளாரின் திருவடிகளில் வைத்து வணங்குமாறு கடிதமும் எழுதினேன்.