பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 மலரும் நினைவுகள் பாலுக்காக 25 உயர்தர பகமாடுகள் பராமரிக்கப் பெற்று வந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேளைக்கு பத்து. விட்டருக்குக் குறையாமல் கறக்கும். இம் மாடுகளின் பராமரிப்பு ஒரு பிரம்மச்சாரியின் பொறுப்பிலிருக்கும். படுகைத் தோட்டங்களில் பல்வேறு கறிகாய்கள் உற்பத்தி செய்யப்பெறும்; இந்தப் பொறுப்பு ஒரு பிரம்மச்சாரி யிடம் இருந்து வரும், இந்த கறிகாய் உற்பத்தியை மீறியும் திருச்சியிலிருந்து கறிகாய்கள் வாங்கப் பெறும். என்ன தான் உணவு முறைகள் சரியாக இருந்தாலும் மான வர்கள் தாமே ஏதாவது வாங்கித் தின்னவேண்டும் என்ற உந்து விசை இயல்பாக இருப்பதை நன்கு அறிந்த அடிகள் பெப்பர்மிண்ட், சாக்கலெட், பிஸ்கோத்து வகைகள், பேப்பர், பென்சில், மை, பேனா முதலிய வைகள் கிடைக்க ஏற்பாடு இருந்தது. இதை ஒரு பிரம்மச்சாரி கவனித்து வருவார். நான் அந்தர் யோகத்திற்கு போவதற்கு (1946) இரண்டாண்டுகட்கு முன் இலால் குடியிலிருந்து ராமுடு, கிட்டு என்ற இரண்டு ஆரிய வைசியச் சிறுவர்கள் அந்தர் யோகத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் அடிகளின்பால் ஈர்க்கப் பெற்றுத் தம் பாகத்திற்குக் கிடைக்கும் சொத் துக்களை ரொக்கமாகப் பெற்று அத்தொகைகளை தபோவனத்திற்கு அன்பளிப்பாக அளித்து விட்டுப்பிரம்மச் சாரிகளாகச் சேர்ந்து கொண்டனர். ராமுடு என்பவர் தான் தபோவனத்தின் மேலாளராக அனைத்துச் செயல் களையும் மிகப் பொறுப்புடன் கவனித்து வந்தவர். மிகவும் சாந்தமானவர். பிரம்மச்சாரிகள் பன்னிரண்டு பேருக்கும் சுமார் 25 ஆண்டு கட்குப் பிறகு அடிகள் கல்லாடையும் புதிய திருநாமமும் வழங்கினார். ராமுடு சாந்தானந்தா என்ற புதுப் பெயருடன் திகழ்ந்தார். நான் திருப்பதியிலிருந்து ஒய்வு பெற்ற பிறகு தலைமைச் செயலகத்தில் (Secretariat) சந்திக்கும் வாய்ப்பு ஏற். பட்டது. அங்குள்ள சிற்றுண்டி சாலையில் சிற்றுண்டி,