பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தவத்திரு சித்பவானந்த அடிகள் 7& களில் பின் தங்கும் மாணவர்கள் பொதுமண்டபத்தில் வந்து பாடங்களுக்குரிய ஆசிரியர்களின் மேற்பார்வையில் வீட்டு வேலைகளைச் செய்யவேண்டும். பாடல்களில் எழும் பல்வேறு ஐயங்கள் ஆசிரியர்களால் அகற்றப் பெறும். இம் முறை ஒரு வகை மேற்பார்வைப் படிப்பாக (Supervised study) g|Goldustb. Qaisgust so I soft L4th வோருக்கு மாணவர்கள் கணக்கிலிருந்து குறைந்த அளவு தொகை எடுத்து மொத்தமாக வழங்கப்பெறும் . மாணவர் விடுதியே இப்பொறுப்பை மேற்கொள்ளும், இரவிலும் 7-30 மணி உணவிற்குப் பிறகு 8 மணி முதல் 9-30 மணி வரை எல்லோரும் படிப்பில் ஈடுபட்டிருக்க வேண்டும். இவற்றை மேற்பார்க்கும் பொறுப்பு தபோவனத்துக்குரிய ஒருவரிடம் இருந்து வரும். நோய் வாய்ப்படும் மாணவர்களைக் கவனிக்க மருத்துவ வசதி உண்டு. காலையில் 8-9 வரையிலும் மாலையில் 5-6 வரை அயிலும் மருத்துவர் ஒருவர் இப்பணியில் ஈடுபட்டிருப்பார். பிரமச்சாரிகள் தபோவனம், ԼDrr655r6չյ fi- விடுதி இவற்றின் நடை முறைகளைக் கவனிக்கப் பன்னிரண்டு பிரம்மச்சாரிகள் தேர்ந்தெடுக்கப் பெற்று அவர்கள் பொறுப்பில் இவை கண்காணிக்கப் பெற்றன. மடப் பள்ளி பற்றிய பணிகளை ஒருவர் ஏற்பார். இட்டலிமாவு அரைத்தல், பொடி வகையறா தயார் செய்தல் ஆகியவை யாவும் இயந்திரங்களால் செய்யப் பெற்றன. உமி மட்டிலும் நீக்கப் பெற்ற அரிசிதான் உணவுக்குப் பயன் படுத்தப் பெறும். ஒருவகை மரத்தாலான திரிசைகளால் இவ்வரிசி தயாரிக்கப் பெறும். இச் செயல்களையெல் லாம் இன்னொரு பிரம்மச்சாரி கவனிப்பார். மடப்பள்ளி யில் உணவு தயாரிக்கும் அலுவல்களை ஒரு பிரம்மச்சாரி கவனிப்பார்.சோறு கஞ்சி வடிக்கப் பெறாமல் தயாராக்கப் பெறும். அனல் வீணாகாமல் பயன்பட்ட அடுப்பு தனிச் சிறப்பு வாய்ந்தது நோய்வாய்ப்பட்டுள்ள மாணவர்களின் இகிச்சைகள் பிறிதொருவரின் பொறுப்பிலிருக்கும்.