பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 மலரும் நினைவுகள் டானிக், லேகியம் தம் கையாலேயே வழங்கி ஆசி கூறுவார். உணவு முறைகள் : மாணவர்கள் தட்டுகளில் உண்பார் கள். அவர்களே தட்டுகளைக் கழுவிக் கொள்ள வேண்டும். இது செய்வதற்கு வரிசையாகக் குழாய்கள் அமைக்கப் பெற்றுள்ளன. கழுவிய தட்டுகளை வரிசையாக வைப்ப தற்கு நிலை தாங்கிகள் (Stands) இருந்தன. அவரவர்கள் தட்டுகளை அவரவர்க்குரிய எண்ணில் வைத்துக் கொள்ள வேண்டும். காலை 7-30 மணிக்கு இட்டலி, தோசை, பொங்கல், உப்புமா இவற்றில் ஏதாவது ஒன்று சட்னி அல்லது சாம்பாருடன் வழங்கப்பெறும். பாலுடன் கலந்த ராகிமால்ட் பானமாக வழங்கப்பெறும். நண்பகல் உணவு வழக்கமாக காய்கறிகளுடன் . மாலை 5 மணிக்கு எளிய முறையில் சிற்றுண்டி; ஏதாவது சுண்டல் முதலியவை. அதன் பிறகு 6-30 மணி விளையாட்டுகள். இரவு 7-30 மணிக்கு உணவு. மோருக்குப் பதிலாக இரவில் உணவுடன் பால் வழங்கப்பெறும். உணவு முதலியவை மாணவர் களாலேயே பரிமாறப்பெறும். முறை வைத்து குழுக்களாக நின்று இப்பணியை மிகவும் அற்புதமாகச் செய்து வரு வதைக் கண்டவர் எவரும் வியக்காமலிக்க முடியாது. உணவு பரிமாறின. பிறகு ஒரு வடமொழி சுலோகத்தால் வழிபட்ட பின்னர்தான் உண்ணத் தொடங்கவேண்டும் என்ற முறை கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது. எல்லோரும் உண்ட பிறகு மீண்டும் ஆஞ்சனேயர் பற்றிய ஒரு சுலோகத்தைப் பேருராலியுடன் நவிற்றி பெரு மகிழ்ச்சியுடன் சேர்ந்தாற்போல் எழுந்து செல்வது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். படிப்பு முறைகள் : எல்லோரும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து காலைக் கடன்களை முடித்துக் கொண்டு படிப்பில் ஈடுபடவேண்டும். அதுபோலவே காலை சிற்றுண்டிக்குப் பிறகு மாணாக்கர்கள் வகுப்பாசிரியர்கள் தந்த வீட்டு வேலைகளைச் (Home - work) செய்யவேண்டும். பாடங்