பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தவத்திரு சித்பவானந்த அடிகள் 7 I இங்கு சுமார் 10 நாட்கள் தங்கியிருந்ததால் வித்தியா வனத்தில் அளிக்கப்பெறும் கல்வி முறையையும் மாணவர் விடுதியில் வழங்கப் பெறும் உணவு முறைகளையும் நன்கு கவனிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த போது இவ்வளவு விரிவாக அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படவில்லை. பள்ளி இயற்கைச் சூழலில் அமைந் திருந்தது. அஃது ஒரு சிறு சாக்தி கிகேதம்’ என்றே சொல்லலாம். தாகூர் சிந்தையில் உதயமாகி நமது கண்ணுக்கு இலக்காகி இருப்பது இன்றைய சாந்தி நிகேதம் என்ற பல்கலைக் கழகம்; 1980-இல் அனைத் திந்திய கீழ்த்திகை மாநாடு-கருத்தரங்கு நடைபெற்ற போது அங்கு மூன்று நாட்கள் தங்கி அந்தச் சூழலை அநுபவிக்க நேர்ந்தது. அது போலவே, விவேகாநந்த வித்தியாலயம் இருந்து வருகின்றது. வகுப்பறைகள் இடம் விட்டுத் தனித்தனியாகச் சற்று உயர்ந்த மேடைகளின் மீது கட்டப்பெற்றுள்ளன. காவிரி பெருக்கெடுத்து வெள்ளம் வரும்போது தண்ணிர் வகுப்பறைக்குள் துழைந்து விடும்; இருக்கைகளைத் தொட்டு ஒடும். அப்போது பள்ளிக்கு விடுமுறை அளிக்கப் பெறும். அருகில் உள்ள நீச்சல் குளமும் சற்று உயர்ந்த நிலையில் கட்டப் பெற்றுள்ளதால் வெள்ளம் அதனுள் புகாது. பெரும் பாலும் மாணவர்கள் நீச்சற் குளத்தைச் சுற்றிலுமுள்ள குழாய்களில் நீராடுவார்கள். சோப்பு போட்டுக் குளிப் பார்கள். பிறகு நீச்சல் குளத்திலும் நீந்துவார்கள், வித்தியாலய மாணவர்கள் எல்லோருமே நீந்தக் கற்றுக் கொள்வது கட்டாயமாக இருந்து வருகின்றது. காலை 6 மணி முதல் 45 நிமிடம் உடற்பயிற்சி; அதன் பிறகு நீராட்டம். 7.30 மணிக்குள் அறையிலிருக்க வேண்டும். நீராடிய பிறகு நெற்றியில் விபூதி சந்தனம் தரித்துக கொள்வது கட்டாயமாக இருந்து வருகின்றது. 9.30 மணி முதல் மாணவர்கள் தம் மெய்யை அடிகளாரிடம் காட்டி தான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். சத்து வேண்டும் என்று குறிப்பிடப் பெற்ற மாணவர்கட்கு அடிகளே