பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 மலரும் நினைவுகள் أنمية மாணவர்க்கு உடற்பயிற்சி இன்றியமையாததாக இருந்த தால் சுமார் 500 மாணாக்கர்கள் ஒரே சமயத்தில் பயிற்சி பெறுவதற்கு இடையில் தூண்களே இன்றி எழுப்பப்பெற்ற அஸ்பேஸ்டாஸ் கூரையின் அடியில் பயிற்சி பெறும் ஆசிரியர்கட்கு உடற்பயிற்சி நடைபெற்றது. அந்தக்காலத்தில் வள்ளல் அழகப்பர் உயிருடன் நடமாடிய காலம். திருச்சி இருப்பூர்தி சந்திப்பில் பயணி கள் தங்கும் அறையொன்றில் தங்கியிருப்பதாகச் செய்தி கிடைத்தது, திருப்பராய்த்துறையில் குடிமைப் பயிற்சி முகாம் நடைபெறுவதாகவும் வசதியாக இருக்கும் ஒரு நாள் வருகை புரிந்து கொடியேற்றி ஒரு மணி நேரம் மாணவர்களிடையே உரையாற்ற வேண்டும் என்று. முதல்வர் எழுதியிருந்தார். வள்ளல் திருச்சியில் தங்கி யிருக்கும் செய்தியைக் கேட்டு எப்படியாவது அவரை இட்டு வரவேண்டும் என்றுகூறி முதல்வர் என்னை அனுப்பினார். நான் காலை 6 மணிக்கே வள்ளலைச் சந்தித்து. திருப்பராய்த் துறைக்கு எழுந்தருளுமாறு வேண்டினேன். தமக்கு முக்கியமான பணியிருப்பதாகவும், உடல்நிலையும் சரியாக இல்லையென்றும், அதனால் தாம் திருச்சியில் ஒய்வாக இருப்பதாகவும் கூறித் தம் இயலாமைக்கு வருத்தம் தெரிவித்து என்னை வாளாதிரும்புமாறு செய்து விட்டார். காலை எட்டு மணிக்கே திருப்பாராய்த். துறையை வந்தடைந்தேன். அவருக்காகச் சிறப்பாகச் செய்யப் பெற்றிருந்த சிற்றுண்டி வகைகளை பேராசிரியர் களாகிய நாங்கள் பகிர்ந்து கொண்டு சுவைத்தோம் . வள்ளல் திருப்பராய்த்துறைக்கு வருகை புரிந்திருந்தால் எத்தனையோ கல்வி நிறுவனங்களை நிறுவியவர் அடிகளாரின் ஆசியைப் பெற்றிருப்பார். உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பெற வேண்டிய கல்வி பற்றிய கருத்துகள் அவர் மனத்தை ஒரு சிறிதாவது மாற்ற: மடையச் செய்திருக்கும் என்பது அடியேனின் கணிப்பு.