பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தவத்திரு சித்பவானந்த அடிகள் 69 முதல்வராக இருந்தபோது ஓராண்டு இப்பயிற்சியை திருப்பராய்த்துறையில் நடத்தலாம் என்று யோசனை கூறினேன். இது நல்ல சூழ்நிலை என்றும் விவரித்து விளக்கினேன். முதல்வர் ஒப்புக் கொண்டார். உணவுப் பொறுப்பை வித்தியாவன விடுதிப் பொறுப்பில் விட்டு விடலாம் என்றேன். இத்தனையும் ஒப்புக்கொண்டார் முதல்வர். திரு.இராமுடு என்ற தபோவன மேலாளருக்கு எழுதி நாளொன்றுக்கு ஆளுக்கு இவ்வளவு தொகை என அறுதியிட்டு இப்பொறுப்பை இறுதியாக்கினேன். தங்கு வதற்குப் படுகையிலுள்ள பள்ளி வகுப்புகளும், பேராசிரியர் கள் தங்குவதற்கு பள்ளி அலுவலகத்திற்கருகிலுள்ள இரண்டு அறைகளும் ஒதுக்கப்பெற்றன. மானவருக்குச் செப்டம்பரில் அளிக்கப்பெறும் விடுமுறையை யொட்டி எங்கள் முகாமை அமைத்துக் கொண்டோம். மாணவர் விடுதியில் காஃபிக்குப் பதிலாக ராகிமால்ட் தான் வழங்கப் பெற்றதால் காஃபி தருவதற்கும் ஏற்பாடு செய்தேன். அதி காலையில் 6 மணிக்கும், 8 மணி சிற்றுண்டியோடும்: 4.30 மணி சிற்றுண்டியோடும் காஃபி வழங்க ஏற்பாடு செய்தேன். நாடோறும் அடிகள் முற்பகல் பிலிருந்து 11 மணி வரை வகுப்பு எடுப்டார். காந்தியடிகள் பேசும் பாணியில் எளிமையான ஆங்கிலத்தில் பேசி உயர்ந்த கருத்து விருந்து அளிப்பார். மாணவர்கள் அடிகளாரின் பேச்சை உற்சாகத்தோடு செவிமடுத்தனர். ஐம்பது அடி தொலைவில் ஒடும் காவிரி மாணவர்களின் நீராட்டத் திற்குக் சிறப்பாக அமைந்தது. மழையானாலும் 7. பல தடவை இப்பயிற்சி இளையாற்றங்குடியிலும் ஒரு தடவை மாத்துTர், ஒரு தடவை, சூரக்குடி, ஒருதடவை பிள்ளையார்பட்டி ஒரு தடவை இராமேசுவரத்திலு மாகப் பத்து முகாம்கள் நடைபெற்றன. முதல் ஐந்தாறு ஆண்டுகளில் மாணவர் விடுதிப் பொறுப்பு என்னிடம் இருந்தமையால் முகாமில் உணவு வழங்கும் பொறுப்பு என்னிடம் தரப்பெற்றிருந்தது.