பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. மலரும் மஞ்சமும்

அன்று முதலிரவு ! வாழ்க்கை இளவேனிலின் புதிய பூங்கொத்துகள் மலர்ந்து மணம்பரப்பும் தேனிரவு !

அவன் அழகன்: அம்பிகாபதியைப்போல 1 தமிழினத்திற்கே இயல்பான மாநிறம் அவன் மேனி ! அவன் அசைவும் பார்வையும், அத்துமீறிய அவன் ஆண்மைக்குக் கட்டியம் கூறிக்கொண்டிருந்தன.

சாய்வு நாற்காலி, துடிக்கும் அவன் இளமையைத் தாலாட்டிக் கொண்டிருந்தது.

அவன் கையில் திருக்குறள். நூலை எடுத்தவுடன் முக்கால் பகுதியை வேகமாகத்

தள்ளிவிட்டுக் கடைசிப் பக்கங்களைக் குறு குறுப்போடு அவன் கைகள் புரட்டிக் கொண்டிருந்தன.

அவன் விரும்பும் ஏதோ ஒன்றை அப்பக்கங்களில் ஆர்வத்தோடு தேடிக்கொண்டிருந்தான் போலும் !

அவன் அப்பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருந்தானே தவிர, ஏனோ படிக்கவில்லை,

விட்டு விட்டு ஒலித்த கிரீச்......கிரீச்...ஓசையுடன் கொஞ்சங் கொஞ்சமாகக் கதவு திறந்தது.

அவன் ஆழ்ந்து படிப்பதுபோல் பாசாங்கு செய்தான்.

家 案 岑