பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 0

நிலவு எப்போதும் மலைக்குப் பின்னால் இருந்துதான் எட்டிப் பார்ப்பது வழக்கம். ஆனால் இன்று கதவுக்குப் பின்னால் இருந்து ஒரு சதை நிலவு எட்டிப் பார்த்தது! ஒரு, கொடித்தேர் மெதுவாகக் குலுங்கிவந்து முன்னால் நின்றது.

அவள் விரல்கள் நடுங்கின; என்றாலும் நடுக்கத் தோடு நாகரிகமாகக் கதவைத் தாளிட்டாள்.

அவள் கையில் பழத்தட்டு !

அந்தியில் தோன்றும் சிவந்த பிறை நிலவைப் போலக் குடகுமலைக் கிச்சிலிப் பழத்தின் உரித்த சுளைகள் அத்தட்டில் படுத்துக் கொண்டிருந்தன.

குங்குமப்பூ மிதக்க, ஏலமும் சருக்கரையுமிட்டுக் காய்ச்சிய பசும்பால் குவளையில் குந்திக் கொண்டிருத்தது. எங்குக் கட்டில் முனகுமோ என்று அச்சப்படுபவள்போல்

மெதுவாக அமர்ந்தாள்.

率 蒙 索

அவன் சிரித்தான்; அவளும் சிரித்தாள். ஆனால் - ஏன் சிரித்தோம் என்று இருவருக்குமே புரியவில்லை. காங்கயம் மாடுகளைப் போல். திருமணச் சந்தைக்காக அவர்கள். இணை சேர்க்கப்பட்டவர்கள் அல்லர். காதலித்து மணம் செய்துகொண்டவர்கள். களவியல் கொம்பில் ஏறி, அந்த அணில் ஏற்கனவே அப்பழத்தைக் கொஞ்சம் கொரித்திருந்தது.

என்றாலும் - அவள் கொய்யாக்கனிதான். அவள் கண்ணில் நாணம் மட்டும் இருந்தது; மருட்சி

ல்லை ! இ 媒 - + 岑 據