பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮮ {

அழகு கொலுவிருக்கும் அம்மஞ்சத்தை,

அவன் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். "ஏன் கட்டிலை அப்படிப் பார்க்கிறீர்கள்?' என்று அவள் கேட்டாள், எதையாவது பேசி அந்த இறுக்கத்தைச் சற்றுத் தளர்த்தும் நோக் காடு.

"எனக்கு இலக்கியக் கட்டில்கள் நினைவுக்கு வந்து விட்டன. சரக்கொன்றைத் தொங்கலிட்ட பந்தலின் கீழ், தனிச்சிங்கக் கால் நான்கு தாங்கும் கட்டில்’ என்றார். பாவேந்தரி' - என்றான் அவன்.

  • இல்லை...இது காட்ரெச் கட்டில்' - என்றாள் அவள். கோவலனும் மாதவியும் படுத்திருந்த கட்டிவில் ஒன்றன் மேல் ஒன்றாக ஐந்து மெத்தைகள் போடப்பட்டி ருந்தனவாம். செம்பஞ்சு, வெண்பஞ்சு, சிறுபூளை, சேணம், அன்னத்தின் தூவி......' என்றான் அவன்,
  • நமக்கு ஒன்று போதும் ' என்று கூறிச் சலங்கைச் சிரிப்பை உதிர்த்தாள் அந்தச் சந்தனச் சிலை.

馨 索 ※

அந்தியில் அவள் கூந்தலில் ஏறிய மல்லிகை மொட்டுகள் மனம் பேச வாய்திறந்து கொண்டிருந்தன.

  • மலரும் மங்கையும் ஒன்று' என்றான் அவன்.

எ ப் படி ? ' என்று விழிகளை அவள் வினாக் குறியாக்கினாள்.

"பூப்பு...என்பது பூவுக்கும் பூவையருக்கும்தானே?" என்று கண்ணால் சிரித்துக் கொண்டே சொன்னான் அவன்,

'குறும்...பூ!' என்று கூறித் தலை குனிந்தாள். தாமரை மொட்டுப்போல.