உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 2

எந்தப் புலவனும் மலரை நினைக்காமல் மங்கையை நினைப்பதில்லை. வள்ளுவர் கூட ஒரு முறை கூறுவதில் நிறைவு பெறாது, மலரன்ன கண்ணாள்...மலரன்ன கண்ணாள் என்று காமத்துப் பாலின் இரண்டு முறை பாடிக் கூறியது கூறல் என்னும் குற்றத்துக்கு ஆளாகிறார்" என்றான் அவன்.

ஏன்? ஆண்கள் மலருக்கு ஒப்பிடப் படுவதில்லையா? வள்ளுவர் கூடத் திருமாலைத் தாமரைக் கண்ணான்' என்றுதானே குறிப்பிடுகிறார். கம்பன் கூட இராமனை ஒரிடத்தில் குறிப்பிடும்போது செந்தாமரைக் கண்ணொடும் செங்கனி வாயினோடும் வந்தான் வல்வில் இராமன் என்று தானே பாடுகிறான்' - என்று கேள்விக் கணை தொடுத் தாள் அக்கிள்ளை மொழி.

  • பெண்களின் முகத்துக்குத் தாமரையும், முறுவலுக்கு முல்லையும். முத்தவாய்க்கு முருக்கம்பூவும், நீள்விழிக்கு நீல மலரும், கைக்கு அல்லியும், காதுக்கு வள்ளையும், மூக்குக்கு எட்பூவும் இலக்கியத்தில் நிலைத்த உவமைகளாகிவிட்டன, ஏன்? சில புலவர்கள் அரும்புகளைக் கூட விட்டு வைக்க வில்லை, ஆகையினால் தான் ஒரு பிரப்பந்தப் புலவன்

"பூவெல்லாம் தன்னிடத்தே பூத்திருக்கப் பார்த்திருந் தும் காவெல்லாம் சென்று சென்று கால்நோகப் பூவெடுத் தாள்' என்று கற்பனை நயத்தோடு பாடுகிறான்' என்று ஒரு சொற்பொழிவே நிகழ்த்தினான் அவன்.

"ஆனால் ஒன்று மட்டும் மறுக்கமுடியாத உண்மை, மலர், கொடியிலோ அல்லது செடியிலோ இருக்கும் வரையில் தான் அதற்குச் செழிப்பு, வனப்பு எல்லாம். பிறர் கைப்பட்ட வுடனே அதற்கு வாட்டந்தான். பெண்ணுடைய நிலையும் அப்படித்தானே! ஆடவன் கை ஒரு பெண் மீது என்று படுகிறதோ, அன்றிலிருந்து அவள் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் மெருகு குலைந்து வாடத் தொடங்கு கிறாள்" என்று கூறிப் பெரு மூச்சு விட்டாள் அவள்.