பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

"இக்கருத்தை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. ஆடவன் கை பட்டதும் பெண்ணுக்குப் புதுப் பொலிவு ஏற்படுகிறது' என்றான் அவன்.

'நீங்கள் கூறும் அந்தப் புதுப் பொலிவு, செடியில் இருக்கும் மலர் மாலையாக மாறும்போது பெறும் மதிப்பைப் போன்றது. ஆனால் மாலையில் கட்டப்பட்ட மலர் அன்று மாலையே வாடி உதிர்ந்து விடுகிறதே!' என்று கூறிச்சிரித் தாள் அவள். -

இலக்கியப் பேச்சு அவளுக்குச் சலிக்கத் தொடங்கியது: எழுந்து விளக்கை அணைக்கப்போனாள்.

அவன் சொன்னான்; வினையை மீட்டும்போது விளக்கை அணைக்கக் கூடாது" என்று

அவள் சட்டென்று திரும்பினாள். இந்த ஆடவர் களுக்குக் கொஞ்சங்கூட வெட்கமே கிடையாது’ எனவெடுக் கென்று சொன்னாள்.

"ஏன் ஆண்டாளுக்கும் கூடத்தான் வெட்கமில்லைl' என்றான்.

எந்த ஆண்டாள்?' என்று கேட்டாள் அவள், ‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள்தான்! என்றான் அந்தக் குறும்புக்காரன். அவளை ஏன் இந்நேரத்தில் இங்கு வம்புக்கு இழுக்கிறீர்?" என்று பெண்ணுக்குரிய பரிவோடு கேட்டாள் அவள்

அவள் பாடுகிறாளே!' "என்ன! விளக்கு வேண்டும் என்றா?" ஆமாம்! பாட்டைக்கேள்’ திருப்பாவைப் பாடினான் அவன்.