பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

好的

தான் எடுத்துக்கொண்டு மற்றொரு கோப்பையை அவள் பக்கம் நீட்டினாள். ஆனால் அவள் மறுத்தாள்.

என்னடி தேநீர் அருந்துவதில்லையா? என்றாள் அலர்மேலு.

'இப்போது சூடாக நான் எதையும் சாப்பிடுவதில்லை'

கு եւի - என்றாள் அவள்.

"ஏன்?’ என்று கேட்டாள் தோழி.

கடந்த நான்கு நாட்களாக என் கணவர் என் நெஞ்சத் தில் நீங்காமல் குடியிருக்கிறார். சூடாக எதையாவது சாப் பிட்டால் அவரை அது சுட்டுவிடாதா?’ என்றாள் அவள், அதைக்கேட்டு விழுந்து விழுந்து சிரித்தாள் அலர்மேலு. கயிறு அறுந்து சிதறிய சதங்கை மணிகளாய் உருண்டது. அவள் சிரிப்பு.

"உன் பேச்சு வேடிக்கையாக இருக்கிறது!’ என்றாள் அலமேலு.

'இது என் வேடிக்கையல்ல. வள்ளுவனின் காமத்துப் பால் வேடிக்கை.

நெஞ்சத்தார் காதல் அவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக்கு அறிந்து 28 11 سد

என்ற பாட்டை நீ படித்ததில்லையா?” என்று கேட்டாள் அவள்,

என்ன இன்று காதற்சுவை உன் பேச்சில் சற்றுத் துரக்கலாகவே இருக்கிறது?’ என்று கேட்டாள் தோழி.

"என்ன செய்யட்டும், நான்கு நாள் பட்டினி......உம்' என்று பெருமூச்சு விட்டாள் அவள்.

'ஏன், உன் அம்பிகாபதி......?’’