பக்கம்:மலர் மணம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

5 s

“ அழகன்-அழகன்-” என்று அழைக்கும் ஒலி, ஒருநாள் எங்கள் கல்லூரி விடுதியில் எதிரொலித்தது. அன்று ஞாயிறு விடுமுறைகாள். முதல்நாள் இரவு கல்லூரி நாடகத்திற்காகக் கண் விழித்திருந்ததினுல், விடுமுறை நாளாயிருந்தும் வெளியே செல்லாது, பட்டப் பகலில் படுக்கையில் படுத்துப் புரண்டுகொண்டிருந் தேன். அழகன் என்ற அழைப்பு எந்த மாணவரின் குர லாகவும் தென்படவில்லே. முன்பின் கேட்டறியாத புத் தொலியாகவே புலப்பட்டது. உடனே விழுந்தடித்துக் கொண்டு என் அறைக்கு வெளியே சென்றேன். தாழ் வாரத்தில் அஞ்சலகத்து ஆள் ஒருவர், நின்றுகொண் டிருந்தார். அவர் என்னைக் கண்டதும், நீங்கள்தான் அழகன ? என்று கேட்டார். ஆம், என்ன செய்தி ? என்று வினவினேன் நான். என்னிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு ஒரு கடிதத்தைத் தந்து மறைந்தார்.

அவா.

யான் கையெழுத்திட்டேனே தவிர, கடிதத்தைக் கையில் பெற்றேனே தவிர, என் நெஞ்சம் ஒரு நிலையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/11&oldid=655951" இலிருந்து மீள்விக்கப்பட்டது