பக்கம்:மலர் மணம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 மலர்

நிற்கவில்லை. என்னென்னவோ எண்ணியெண்ணி, அலை கடல் நடுவண் அகப்பட்ட துரும்பென அலைந்து தவித் தது. ஏன்? அன்று ஞாயிற்றுக்கிழமை ; அஞ்சலகத் துக்கு விடுமுறைகாள். எவரும் கடிதம் பெறவியலாது. சனிக்கிழமை அனுப்பப்படும் எ க் கடித மும் ஞாயிறு கடந்தபின் திங்கட்கிழமைதான் உரியவரை அடைய முடியும். சனிக்கிழமை யனுப்பும் கடிதம் ஞாயி றே கிடைக்க வேண்டுமாயின், வழக்கத்துக்குமேல் இரண் டணு அ ஞ் ச ல் த லே கூடுதலாக உறைமேல் ஒட்ட வேண்டும். செய்தி விரைவில் சேரவேண்டும் என்னும் குறியுடையோரே இவ்விதம் செய்தல் வழக்கம். இதனை ஆங்கிலத்தில் எக்ஸ்பிரஸ் டெலிவரி (Express Delivery) என்பர். எனக்கு அன்றைய ஞாயிறில் கிடைத்த கடிதம் இத்தகையதே. இதுதான் என் மனத்தடுமாற்றத்தின் காரணமாகும்.

பொங்கல் விடுமுறைக்கு ஊருக்குச் சென்றிருந்த நான், பெரும்பொங்கல், மாட்டுப்பொங்கல் போனதும், கரிநாளுக்கு மறு நாள் புறப்பட்டுக் கல்லூரி வந்து சேர்ந்துவிட்டேன். வந்த பத்து நாட்களிலேயே இக் கடிதம் என்னத் தொடர்ந்து வந்திருந்தது. அனைத் துலகிலுமுள்ள தமிழ்ப் பெருங்குடிமக்கள் அனைவரும் தைதோம் தைதோம் எ ன் ற எக்களிப்புடன் தைப் பொங்கல் விழாவினைக் கொண்டாடினராயினும், எங்கள் விட்டினர்க்குமட்டும் அவ்வாண்டைய பொங்கல்விழா சு வைக்க வில் லே. எங்கிருந்து சுவைக்கும் ? என் தாயார்க்குத்தான் உடல்நலம் இல்லையே! எங்களுக் காகப் பொங்கல் பெருங்ாள் நின்றா விடும்? அது வந்தது போலவே போயிற்று. உ ட லே நன்கு பாதுகாத்துக் கொள்ளும்படி அன்னையிடம் உருக்கமாகச் சொல் லி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/12&oldid=655962" இலிருந்து மீள்விக்கப்பட்டது