பக்கம்:மலர் மணம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 மலர்

அன்புள்ள அத்தான்! வணக்கம்.

நீங்கள் நன்றாகப் படித்து வெற்றியுடன் தேர்வு எழுதவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். உங்கள் படிப்புக்கு இடையூருக இக்கடிதம் எழுத நேர்ந்தமைக்கு மன்னிக்கக் கோருகிறேன். கடிதம் எழுதி உங்கள் அமைதியைக் கலைக்கக் கூடாது என்று தான் நானும் பொறுத்திருந்து பார்த்தேன். என்னலும் முடியவில்லை. எழுதவேண்டிய நெருக்கடி ஏற்பட்டு விட்டது. எழுதிவிட்டேன். -

சில நாட்களாக அப்பா என்னைக் கடுமையாகக் கண்காணித்து வருகிறார். நீ அழகன மணக்க முடியாது; எப்படியாவது உன்னே அந்தப் பாண்டியனுக்கே கட்டிக் கொடுப்பேன். மனத்தை மாற்றிக்கொள்’ என்று என்ன காளுக்குநாள் கரைக்க முயன்றார். அப்பாவுக்கு நான் கொடுத்துக்கொண்டு வந்த பதில் கண்ணிர் ஒன்றுதான்! போதாக்குறைக்கு, அந்தப் போலிசுக்காரப் பாண்டியன் நம் ஊர்ப் போலீசு நிலையத்துக்கே இன்சுபெக்டராக வந்துவிட்டார். இயற்கையாகத்தான் அவரை இங்கு மாற்றினர்களோ ? அல்லது என்னைப் பழிவாங்குவதற் காக அவராகவே இங்கு மாற்றிக்கொண்டு வந்துவிட் டாரோ ? என்னவோ தெரியவில்லை.

தந்தைக்குக் கட்டுப்படாமல், மாயாண்டி முதலியார் மகளேத்தான் கட்டிக்கொள்வேன் என்று அவர் குரங்குப் பிடியாய் இருப்பதை அப்பா எப்படியோ தெரிந்து கொண்டார். அப்பாவும் பாண்டியனும் இப்பொழுது நகமும் சதையுமாக இழைகிறார்கள். அப்பா அடிக்கடி பாண்டியன்தங்கியிருக்கும் இடத்துக்குப்போய்வருகிறார், அவரும் எங்கள் வீட்டிற்கு வந்துபோகத் தொடங்கிவிட் டார். என்ன செய்வதென்று எனக்குப் புரியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/132&oldid=655976" இலிருந்து மீள்விக்கப்பட்டது