பக்கம்:மலர் மணம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 மலர்

உடன்படவே மாட்டார்கள். அதல்ை, நீ உன் மனத்தை மாற்றிக்கொள்ள வேண்டியதுதான் !”

“நீயுமா அண்ணு இப்படிச் சொல்கிறாய்?”

“ நான் என்ன செய்வது கற்பகம் ! நம் பெற்றாேச் இல்லாமல், நீ என் பொறுப்பில்மட்டும் இருப்பதா யிருந்தால் நான் உன் எண்ணத்தை ஈடேற்றிவிடுவேன். நிலைமை வேறுமாதிரியா யிருக்கிறதே !”

‘ கலப்புத் திருமணத்தைப்பற்றி நான் கட்டுரை களில் படி த் தி ரு க் கிறேன். உண்மையில் இது போன்றதைக் கலப்புத் திருமணம் என்று சொல்வதற் கில்லே. மனித இனத்திற்கும் மிருக இனத்திற்கும்அல்லது-மிருக இனத்திற்கும் பறவை இனத்திற்கும் உறவு ஏற்பட்டால் அதுதான் கலப்புத் திருமணம் : வெவ்வேறு இனம் கலக்கிறது; ஆல்ை மனித இனத்துக் குள்ளே ஏற்படும் உறவு எப்படி கலப்பு எனப்படும் ? எல்லோரும் ஒருகுலம். யார் யாரை வேண்டுமானலும் மணந்துகொள்ளலாம்-என்று பல கட்டுரைகளில் நான் படித்திருக்கிறேன். அவையெல்லாம்கூட நீ வாங்கி வந்து தந்த இதழ்களிலிருந்து படிக்கப்பட்டவையே! அல்லாமலும், நான் வேறு நிறத்தாரையோ-மொழி யாரையோ-சாதிசமயத்தாரையோ மணந்து கொள்ளப் போவதாகக் கூறவில்லையே! நம் இனத்தவராகிய முத்தைய முதலியார் மகனைத்தானே மணக்க விரும்பு கிறேன். தாய் மட்டும்தானே வேறு குலத்தைச் சேர்ந்தவர் ? எத்தனையோ குடும்பங்களில் இத் தகைய சீர்திருத்தத் திருமணங்கள் நடந்திருப்பது அண்ணுவுக்கும் தெரியுமே ! எனக்காக நம் பெற்றேரிடம் அண்ணு போராடக்கூடாதா? இது பற்றி உன் கருத்து என்ன அண்ணு ?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/162&oldid=656007" இலிருந்து மீள்விக்கப்பட்டது