பக்கம்:மலர் மணம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 171

கூடாதா ? பாரி தன் தேரை முல்லைக்கொடிக்கும், பேகன் தன் போர்வையை மயிலுக்கும், அதியமான் நீண்டநாள் வாழவைக்கும் நெல்லிக்கனியை ஒளவைக் கும், சிபி என்னும் சோழன் தன்னையே ஒரு புருவிற் காகவும் ஆகத் தியாகம் செய்தார்களாம். நான் உயிரி னும் இனிய ஒரே தங்கைக்காக எனது வீராப்பைத் தியாகஞ் செய்யக்கூடாதா ?

இல்லையில்லே-நான் ஒருவன் காலில் விழமுடியாது. இது எனக்குப் பெருத்த மானக்கேடு! என் உடலி லுள்ள ஒவ்வோர் உயிர்அணுவுக்கும் மானக் குறைவு ! இதற்காகவா இந்தத் தசை முட்டையை இவ்வளவுநாள் வளர்த்தேன் ? ஒருவன்காலில் விழுந்து கெஞ்சிவிட்டு உயிரோடு எப்படி உலாவுவது ? காலில் விழுந்து பெண்ணேக் கட்டிக்கொடுத்தார்கள் என்ற மறையாத மறு-அழியாத களங்கம் ஆணி யறைந்தாற்போல் எங்கள் குடும்பத்தோடு பதிந்துவிடுமே ? இந்தப் பழி இப்போது இருக்கின்ற எங்களுக்கு மட்டுமா ? இனி வாழையடி வாழையாக வழி வழி வரவிருக்கின்ற எங்கள் மரபினர் அனைவருக்குமே இந்த வடு நீங்காதே ! நான் ஒருகாலும் இதற்கு உடன்படேன். எவள் வாழ்ந்தால் என்ன-செத்தால் என்ன ? எவள் கட்டிக்கொண்டால் என்ன-கன்னியாகவே காலங்கழித்தாலும் எனக் கென்ன ? அண்ணனது மானத்தைப் பறிகொடுத்து, வழி வழிவந்த குடும்பத்தின் மாண்பினைக் காற்றில் பறக்க விட்டு, ஒரு பெண் மணந்துகொண்டு வாழ்வதைவிட, வாழா வெட்டியாக இருந்து மடிவதேமேல்!

இல்லேயில்லை-என் தங்கை வாழத்தான் வேண்டும். பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்களேஅண்ணன் இரங்கக்கூடாதா? மான உணர்வு முனைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/173&oldid=656019" இலிருந்து மீள்விக்கப்பட்டது