பக்கம்:மலர் மணம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 மலர்

“உங்கள் மகன் அழகன் காவல் நிலையத்தில் பலர் முன்னிலையில் பாண்டியனேத் தாக்கி அவமானப்படுத்தி விட்டாராம். அப்போது பாண்டியன் அழகனப் பார்த்து, ! உன்னே என்றைக்காவது ஒருநாள் என் காலில் விழுந்து கெஞ்சச் செய்கிறேன்’ என்று வஞ்சினம் கூறினராம். உயிர் போனுலும் உன் காலில் விழவேமாட்டேன்’ என்று உங்கள் மகன் பதிலுக்குச் சொல்லிவிட்டு வந்தாராம். எனவே, உங்கள் மகன், தன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டால் கற்பகத்தை மணந்து கொள்வதாகப் பாண்டியன் சொல்லிக்கொண் டிருக்கிறார். இவ்வளவுதான் நான் சொல்ல வந்தது. இனி, நீங்களாயிற்று-அவர்களா யிற்று. ” .

இவ்வாறு காளியப்பன் சொல்லி முடித்ததுமே, அப்பா-அம்மா-கற்பகம் எல்லோருமே கலவரத்துடன் என்னை நோக்கினர்கள். கற்பகத்தின் திருமணமே என் கையில் இருப்பதாக அவர்கள் நினைப்பதுபோல் அவர் களின் பார்வை எனக்குத் தோன்றியது. நான் பாண்டி யன் காலில் விழுந்தால் கற்பகத்துக்குத் திருமணம்இல்லையேல் அவள் காலமெல்லாம் கன்னிதான்! வணங்காமுடி மன்னகை வளர்ந்துவந்த என்னுடைய தன்மானத்துக்கு இவ்வளவு பெரிய சோதனையா ? இதற்கு நான் ஒத்துக்கொள்வதா ? o

தனி மனிதன் ஒருவனது தன்மானத்துக்காக ஒரு .ெ ப ண் ணி ன் வாழ்க்கையைப் பாழ்படுத்துவதா ? பயனற்ற வரட்டு மதிப்பிற்காக ஒரு திருமணத்தைத் தடைசெய்வதா ? யார் யாரோ யார் யாருக்கோ என்ன என்ன தியாகமோ செய்திருக்கும்போது ஒரு தங்கைக் காக ஓர் அண்ணன் இந்தத் தியாகத்தைச் செய்யக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/172&oldid=656018" இலிருந்து மீள்விக்கப்பட்டது