பக்கம்:மலர் மணம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 மலர்

திடீரென்று தமிழ்த் திருமணம் எப்படி நடத்துவது என்று எல்லோரும் விழித்தார்கள். நான் இதற்கென்றே முன்கூட்டியே அழைப்பிதழ் அனுப்பி வருந்தி வேண்டி எங்கள் தமிழ்ப் பேராசிரியர் அவர்களையும் தத்துவப் பேராசிரியர் அவர்களேயும் தருவித்திருந்தேன். தமிழ்ப் பேராசிரியர் தலைமை தாங்கித் திருமணத்தை நடத்தி வைத்தார். தத்துவப் பேராசிரியர் வாழ்த்துரை வழங் கிர்ை. நிகழ்ச்சிகள் யாவும் தமிழிலேயே நடந்தன.

இந்தப் புரட்சியிலும் இன்னொரு புரட்சி ! என்ன தெரியுமா ? எங்கள் தமிழ்ப் பேராசிரியர், தாழ்ந்த குலம் எனப்படும் பறையர் வகுப்பைச் சேர்ந்தவர். தத்துவப் பேராசிரியரோ, உயர்ந்த குலம் எனப்படும் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர். இருவருமே சிறந்த பண்பினர்-சீரிய நோக்கினர். தாழ்ந்த குலத்தினர் என்பதற்காக எவரையும் தாழ்த்துவதும் இல்லைஉயர்ந்த குலத்தினர் என்பதற்காக எவரையும் உயர்த்து வதும் இல்லை என்னும் எங்கள் நடுநிலக் கொள்கைக்கு இந்நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு. ‘பெரியோரை வியத் தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே ‘ என்பது புறநானூறு அல்லவா ? -

பேராசிரியர்கள் இருவரும் வாழும்முறை விளக்கி வழங்கிய வாழ்த்துரைகள் பலவற்றுள், மணமகனுக்கு ஒன்றும் மணமகளுக்கு ஒன்றுமாக இரண்டே இரண்டு கருத்துக்கள் மட்டும் ஈண்டு வருமாறு :

மணமகனுக்கு-” ஒர் ஆண் மகனுக்கு வாழ்க்கைத் துணைவியாக ஒரு நல்ல பெண்மகள் தேவை. அவளும் அவளது அன்பும்தான் தேவையே தவிர, அவளுடன் வரும் சீர்வரிசைகளில் கணவன் கவனம் செலுத்துவதோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/182&oldid=656190" இலிருந்து மீள்விக்கப்பட்டது